தனுஷ் காட்டில் மழைதான்! உயர் நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் இளம் முன்னணி ஹீரோவான தனுஷின் 50வது திரைப்படம் ராயன் அப்டேட்களுக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான வாத்தி படத்தை தொடர்ந்து அவரது அடுத்தடுத்த படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி பட காட்சிகள் தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் தணிக்கை துறையின் அறிவுறுத்தலின் பேரில் எச்சரிக்கை வாசகம் இல்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சார்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விஜய் நடிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்ட விஜய்காந்த்! பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை!

இந்த மனுக்களை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவிற்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில் புகார் மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக ஏற்கனவே தணிக்கை செய்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய முடியாது என்றும் புகார் தெரிவிக்கும் முன்பு தங்களிடம் எந்தவித விளக்கமும் கோரப்படவில்லை எனவும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews