விஜய் நடிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்ட விஜய்காந்த்! பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை!

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை வளர்த்து விட்ட பெருமை விஜய்காந்த் அவர்களை தான் வந்து சேரும். அந்த அளவிற்கு விஜய்காந்த் முன்னணி கதாநாயகனாக இருந்த காலகட்டத்தில் பல இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த்தை வைத்து இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றது.

அவர் இயக்கிய பல படங்களில் சிறிய கதாபாத்திரத்திலாவது விஜய்யை நடிக்க வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்காந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அப்படி நடித்த படம் செந்தூர பாண்டி. 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரசேகர் அவர்களால் இயக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய்காந்த் தம்பியாக விஜய் நடித்திருப்பார்.

அதே போல 1984 ஆம் ஆண்டு வெற்றி திரைப்படம் வெளியானது. இந்த படமும் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த பாடத்தில் கதாநாயகனின் பெயரே விஜய் தான். மேலும் படத்தில் சின்ன வயது விஜயகாந்தாக விஜய் நடித்திருப்பார்.

அதை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு வெளியான வசந்த ராகம், 1981 இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படங்களும் சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் தான். இந்த படங்களிலும் சின்ன வயது விஜயகாந்தாக விஜய் நடித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் பேட்டிகளில் விஜய் கூறும் போது விஜயகாந்த் அவர்கள் படங்களில் நடித்ததன் மூலமாக தான் நடிப்பதற்க்கே கற்று கொண்டதாக கூறியுள்ளார். தற்போழுது உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் விஜயகாந்த்.

ஆனால் அவர் நடிப்பு திறமை குறித்து பல பிரபலங்கள் இன்றளவும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பேசிய வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருடைய இரண்டாவது திரைப்படம் செந்தூர பாண்டி. விஜயகாந்த் அவர்களுக்காக எழுதிய கதையில் விஜய் நடித்ததற்கான காரணத்தையும் விஜய் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சினிமாவில் கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ் என இரண்டு விதம் உள்ளது. மாஸ் ஆடியன்ஸ் அப்படி என்றால் மக்கள் ஒருவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்வது. அப்படி பார்த்தால் விஜயகாந்த் அண்ணன் அன்றைக்கும் சரி அன்றைக்கும் சரி எப்பவுமே மாஸ் தான்.

சீரியல் பாக்கியாவிற்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? அதிரவைக்கும் அப்டேட் இதோ!

அப்படி மாஸ் ஹீரோவை வைத்து என்னுடைய அப்பா இயக்கும் போது அவரோட தம்பி ஆக என்னை நடிக்க வைத்தார் . அப்போது படத்தில் விஜயகாந்த் சாரை பார்க்க வரும் மக்களுக்கு நானும் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது என‌ நினைத்தேன். அந்த படமும் வெற்றி பெற்றது. நாங்கள் நினைத்தது எல்லாம் நடந்தது என்று விஜய் தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...