‘கூல் அக்கா’ வாக வந்த கூல் சுரேஷ்.. பெண் வேடமிட்டு கலந்து கொண்ட நிகழ்ச்சி.. வைரலாகும் வீடியோ..,

தலைவன் எப்பவுமே வித்தியாசமான ஆளுதான் போங்க.. யார சொல்றேன்ன்னு தெரியுதா..? நம்ம கூல் சுரேஷ் தாங்க. கடந்த 2001-ம் ஆண்டு சாக்லேட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து காமெடி வேடங்களிலும், சந்தானம் படங்களிலும் நடித்து வருபவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருக்கும் கூல் சுரேஷ் அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் போது பஞ்ச் வசனங்களைப் பேச அவை வைரல் ஆன நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கும் பேச ஆரம்பித்தார்.

மேலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் முதல் ஆளாகப் போய்ப் பார்த்து அந்தப் படங்களைப் புகழ்வது வழக்கம். மேலும் எந்தப் படத்திற்குச் செல்கிறாரோ அந்தப் படத்தின் ஹீரோ போன்றோ அல்லது படத்தின் தலைப்புக்கேற்றவாறோ தனது நடை,உடை, பாவனை அனைத்தையும் மாற்றிக் கொண்டு அந்தப் படத்திற்கு சொல்லாமலே விளம்பரம் ஏற்படுத்திக் கொடுப்பது கூல் சுரேஷின் ஸ்டைல். அண்மையில் கூட விழா மேடையில் தனக்கு அணிவித்த மாலையை பெண் தொகுப்பாளருக்கு அணிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் பின்பு அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் தேர்தலில் பிரச்சாரத்திற்கும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனார். இப்படி தொடர்ந்து சமூக வலைதளப்பக்கங்களில் அவரைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கூல் சுரேஷ் அட்ராசிட்டியின் உச்சமாக பெண்வேடமிட்டு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோதான் இணையத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

கல்யாணம் பண்ணாததற்கு இப்படி ஓர் விளக்கமா? திருமண உறவு குறித்து கோவை சரளா சொன்ன பதில்

கன்னி என்ற படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த கூல் சுரேஷ் நிகழ்ச்சி மேடையில் பெண் வேடமிட்டு வந்திருந்தார். இதனைக் கண்ட அனைவரும் ஒரு நிமிடம் யாரென்று அடையாளம் தெரியாமல் ஷாக் ஆக பின்னர் கூல்சுரேஷ் என்று தெரிந்து கொண்டு அவரை ரசித்தனர். பச்சை நிற டாப் மற்றும் சிவப்பு நிற தாவணி போன்று அணிந்து பெண்களைப் போலவே அந்த நளினத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். விழாவிற்கு வந்திருந்தவர்கள் கூல் சுரேஷையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...