அவன் ஒரு… முன்னாள் கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. பாடகி சுசித்ரா பகீர் பேட்டி…

பண்பலை வானொலியில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் லேசா லேசா படத்தின் மூலம் பின்னனிப் பாடகியாக அறிமுகமாகி பல ஹிட் பாடல்களைப் பாடியவர்தான் சுச்சி என்கிற சுசித்ரா. நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பல சுச்சீ லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. மேலும் அதில் தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினியின் பெர்ஷனல் புகைப்படங்களை வெளியிட்டும் பரபரப்புக்கு உள்ளானது. இதற்குக் காரணம் பாடகி சுசித்ரா தான் என்று பேசப்பட்டது.

பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை கடந்த 2005-ல்திருமணம் முடித்து கடந்த 2017-ல் விவாகரத்து பெற்றார். தற்போது இவர்களது விவாகரத்துக்கான காரணம் மற்றும் தனுஷ் -ஐஸ்வர்யா பிரிவு போன்றவற்றைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் (யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நண்பராக நடித்தவர்) ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அடிக்கடி மும்பை சென்று விடுவதாகவும், ஹோட்டலில் அவரது நண்பர்கள் மூவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டனர் என்றும் மேலும் குழந்தை பிறக்காததற்கு அவருக்குத்தான் குறைபாடு எனவும் பல பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதுவே எங்கள் பிரிவிற்குக் காரணமானது எனவும் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் காலத்து ஜெயிலராக மிரட்டிய எம்.ஜி.ஆர்..முத்துவேல் பாண்டியனுக்கு முன்னரே வந்த பல்லாண்டு வாழ்க..

நான் 12 வருடமாக அவரிடம் விவாகரத்து கேட்டேன் என்றும், தனுஷும், கார்த்திக் ராஜும் என்ன கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் இருவரையும் பற்றி ஆவேசமாக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார் சுசித்ரா.

மேலும் தனுஷ், ஐஸ்வர்யா பற்றிப் பேசும்போது தனுஷ் சிறந்த அப்பா என்றும், ஐஸ்வர்யா பேட் அம்மா என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனிப்பட்ட முறையில் தனுஷை எனக்கு பிடிக்காமல் இருந்தாலும் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது சரிதான் என்றும், இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி ஏமாற்றிக் கொண்டார்கள் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டினை வைத்திருக்கிறார் சுசித்ரா. அவரின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களை சூடேற்றி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...