சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிப்பி!!

0e566e8e582e8ba36a70dfdabe277cca

தக்காளி ஊறுகாயினை பொதுவாக நாம் கடைகளிலேயே வாங்கிச் சாப்பிடுவோம். இப்போது நாம் தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :

தக்காளி – ஒரு கிலோ,
பூண்டு –  2,
காய்ந்த மிளகாய் –  15,
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
கடுகு –  1  ஸ்பூன்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1.  தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெந்தயம், கடுகைப் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் பூண்டு மற்றும் தக்காளியைப் போட்டு குழைய வதக்கி மஞ்சள்தூள், பொடித்த தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.
4. அடுத்து நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி இறக்கினால் தக்காளி ஊறுகாய் ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews