சுவையான காடை ஃப்ரை!!

60c2cd9c1084a314d53ddc1f2051a886-1

காடையில் குழம்பு, வறுவல், கிரேவி எனப் பல வகையான ரெசிப்பிகளை செய்வார்கள். காடை சிக்கனை விட சுவையாக இருக்கும், அத்தகைய காடையில்  ஃப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காடை – 3

எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  – 3 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள்  – 2 ஸ்பூன்
மிளகாய் தூள்  – 2 ஸ்பூன்
தயிர்  – 2 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்புதேவையான அளவு
மஞ்சள் தூள்- தேவையான அளவு

 

செய்முறை :
 

  1. காடையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. அடுத்து சுத்தம் செய்த காடையுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கழுவவும்.
  3. அடுத்து காடையுடன் எலுமிச்சைசாறு, இஞ்சி, பூண்டுவிழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், தயிர், மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊற விடவும்.
  4. அடுத்து ஊறவைத்த காடையினை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் காடை வறுவல் ரெடி.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews