Categories: தமிழகம்

டேட்டா என்ட்ரி பணியாளர்களை திடீரென நிறுத்திய சென்னை மாநகராட்சி: பிறப்பு, இறப்பு பதிவுகள் பாதிப்பா?

சென்னை மாநகராட்சியில் டேட்டா என்ட்ரி பணியாளர்கள் திடீரென பணியிலிருந்து நிறுத்தப்பட்டதால் பிறப்பு இறப்பு பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் தினமும் நூற்றுக்கணக்கான பிறப்பு இறப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பதும் ஆன்லைன் மூலம் இவை பதிவு செய்யப்பட்டாலும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உதவியாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர்களாக இவர்கள் பணி செய்து கொண்டு இருந்த நிலையில் திடீரென அவர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதால் தற்போது பிறப்பு இறப்பு பதிவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆயிரக்கணக்கான சான்றிதழ்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாதம் 9000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிறப்பு இறப்பு சான்றிதழை பதிவு செய்ய முடியாமல் மற்றும் திருத்தம் செய்ய முடியாமல் சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது சென்னை மாநகராட்சியில் தினமும் நூற்றுக்கணக்கான பிறப்பு மற்றும் இறப்புகள் நடக்கின்றன என்றும் இவை உரிய வகையில் ஆய்வு செய்து மாநகராட்சி இணையத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றும் எங்களுக்கு உதவி செய்வதற்காக டேட்டா என்ட்ரி பணியாளர்கள் இருந்தனர் என்றும் ஆனால் தற்போது அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்
டேட்டா என்ட்ரி பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைத்து சான்றிதழ்களையும் பதிவு செய்ய முடியவில்லை என்றும் சுகாதார பணிகளையும் சேர்த்து நாங்கள் இந்த கூடுதல் பணியையும் பார்க்க வேண்டியது உள்ளது என்றும் கூடுதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்

இதே ரீதியில் சென்றால் மேலும் அதிக சான்றிதழ்கள் தேக்கம் அடையும் சூழ்நிலை ஏற்படும் என்றும் எனவே இதற்கு உடனடியாக ஒரு மாற்று நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Published by
Bala S

Recent Posts