டைட்டில் போன போய்ட்டு போகுது… ஹூரோவாகிவிட்டார் தர்ஷன்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடியவுள்ளது.

17 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்தப் போட்டியானது தற்போது பைனல்ஸை நோக்கி பயணிக்கிறது.  கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், பிக் பாஸ் கவினுக்கு உதவி செய்ய நினைத்து 5 லட்சம் ரூபாய் யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று கூற, கவின் இது தனக்கு பிக் பாஸ் கொடுத்த வாய்ப்பு என்று எண்ணி கவ்விக் கொண்டு ஓடி விட்டார்.

அதனால் டபுள் எவிக்ஷன் இந்தமுறை வித்தியாசமாகிப் போனது. கமல் ஹாசன் கவின் வெளியேறியதால் எவிக்ஷன் இல்லை என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு தர்ஷன் எவிக்ட் ஆவதாக கூறினார்.

47e6557e762bbca064a64ba6c49e0aa8-1

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் தர்ஷனோ சிரித்தவாறே வெளியேறினார். டைட்டிலை தர்ஷன் வெல்லவில்லையே என்ற ஆதங்கம் பலர் மனதிலும் இருக்க, தர்சனுக்கு டைட்டிலைவிடவும் சூப்பரான ஆஃபர் கிடைத்துள்ளது.

வெளியேறிய தர்சனுக்கு பலரும் வாழ்த்துகள் மற்றும் ஆதரவு தெரிவிக்க, லிப்ரா புரொடக்ஷன் சார்பில், கோலிவுட்டில் உங்கள் பயணம் தொடர உள்ளது என்ற வாழ்த்துகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் தர்சனை விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்கலாம் என்பதே இந்த ட்விட்டர் பதிவாகும். பார்வையாளர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...