மும்பை, ஆர்சிபிக்கே வராத தைரியம்.. சிஎஸ்கேவுக்கு எதிரா மட்டும் நடக்காமல் போன ரஷீத் மேஜிக்..

டி 20 போட்டிகள் என வந்து விட்டாலே பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். அதிகமான பந்து வீச்சாளர்கள் இந்த டி 20 போட்டிகளில் பலம் வாய்ந்து இருப்பதே அரிதான நிகழ்வு தான். அதையும் தாண்டி வேகப்பந்து வீச்சாளர்கள் சிலர் டி 20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வரும் அதே வேளையில் சுழற்பந்து வீச்சாளர்கள் டி 20 போட்டிகளில் நம்பர் ஒன்னாக இருப்பதற்கு அதிக திறமை வேண்டும்.

அந்த வகையில் சில முக்கியமான சுழற்பந்து வீச்சாளர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மிக மிக முக்கியமான ஒருவர் தான் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான். டி 20 போட்டி என வந்து விட்டால் கூட இவரது பந்துவீச்சை எதிரணியினர் அடித்து ரன் சேர்ப்பதே மிக கடினமாக இருக்கும். சிக்கனமாக ரன்களை கொடுக்கும் ரஷீத் கான் ஓவரில் பெரும்பாலும் பவுண்டரிகள் போவதும் குறைவாக தான் இருக்கும்.

இதனால் மிக அசாத்தியமான பவுலராக டி 20 போட்டிகளில் வலம் வரும் ரஷீத் கான் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். சமீபத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றிருந்தது.

முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியிருந்த குஜராத், சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் நான்கு ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் வேறு எந்த அணியாலும் முடியாத ஒரு விஷயத்தை ரஷீத் கான் பந்து வீச்சுக்கு எதிராக சிஎஸ்கே அணி படைத்துள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணி மோதி இருந்தது. இந்த போட்டியில் ரஷீத் கான் வீசிய மூன்று ஓவரில் 44 ரன்களை சிஎஸ்கே எடுத்திருந்தது. இந்த மூன்று ஓவர்களில் முறையே 16, 13 மற்றும் 15 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. தற்போது நடந்து முடிந்த போட்டியில், ரஷீத் கான் ஓவர்களில் முறையே 11, 10, 13 மற்றும் 15 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது.

ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக ரஷீத் கான் வீசிய அனைத்து ஓவர்களிலும் 10 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுக்கப்பட்டது இந்த இரண்டு முறை தான். அந்த இரண்டு தடவையும் அது சிஎஸ்கே அணிக்கு எதிராக தான் நடந்துள்ளது என்பது தான் மற்ற அணிகளையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...