இலவசம் இலவசம் இனி கொரோனா பரிசோதனை இலவசம்.. அமெரிக்க அதிபர் அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். எப்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கொரோனாத் தொற்றுத் தடுப்பூசி, கொரோனா பரிசோதனை, கொரோனாவைக் குணப்படுத்த சிகிச்சை என அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

கொரோனாத் தொற்றால் பெரிய அளவால் பாதிக்கப்பட்டு நாடுகளில் ஒன்று அமெரிக்கா. பெரிய அளவிலான உயிர் சேதத்தை சந்தித்த அமெரிக்கா தற்போது கொரோனாத தற்காப்பு நடவடிக்கையில் தற்போது மும்முரம் காட்டி வருகின்றது.

இந்தநிலையில் மக்களின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலவச கொரோனா பரிசோதனையினை அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜனவரி 19 ஆம் தேதி முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நினைத்தால் COVIDTests.gov என்ற வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரு வீட்டின் முகவரிக்கு 4 பரிசோதனைகள் இலவசம் என்றும், கொரோனா பரிசோதனை ரிசல்ட் 7 முதல் 12 நாட்களுக்குள் தபால் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலவச கொரோனா பரிசோதனை அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Published by
Gayathri A

Recent Posts