குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா வீட்டில் விரைவில் குவா குவா சத்தம்.. வைரல் போஸ்ட்டை பாருங்க!

நடிகை ரித்திகா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாலி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ரித்திகா விஜய் டிவியில் கிரியேட்டிவ் புரடியூசராக இருக்கும் வினுவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். மேலும் தற்போது ரித்திகா கர்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

குக் வித் கோமாளி ரித்திகா:

ரித்திகா 2002ம் ஆண்டு இந்தியில் வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ரித்திகா 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரபான ராஜா ராணி சீரியலில் வினோதினி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் மருமகள் அமிர்தாவாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். அதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று 6 சீசன்களை கடந்துள்ளது. மேலும் பிக் பாஸில் பங்கேற்ற பலருக்கும் பட வாய்ப்புகள் தேடி வந்துக்கொண்டிருக்கிறது. யார் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டாலும் அவர்களுக்கு அது ஒரு நல்ல ப்ளாட்ஃபார்மாக அமைகிறது. சிவகார்த்திகேயன், புகழ் உள்ளிட்ட பலர் விஜய் டிவியில் தொடங்கி இப்போது சினிமாவில் தனக்கென இடத்தை உருவாக்கியுள்ளனர்.

விரைவில் தாயாக போகிறார்:

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பல பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. நகைச்சுவையுடன் சமையல் நிகழ்ச்சியான அதில் போட்டியாளர்கள் சமைப்பதும் கோமாளிகள் அவர்களை தொல்லை செய்வதும் என சுவாரசியமாக கொண்டு சென்றிருப்பார்கள். அதில், கோமாளியாக பங்கேற்ற புகழ், பாலா, சிவாங்கி போன்ற பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளனர். மேலும் குக் வித் கோமாளி வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து விட்டது.

அதை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துக்கொண்ட ரித்திகா விஜய் டிவியின் கிரியேட்டிவ் புரடியூசர் வினு என்பவரை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரையை விட்டு விலகியிருக்கும் ரித்திகா தான் அம்மாவாக போகும் செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமாக பகிந்துள்ளார்.

ஒரு ஸ்லேட்டில் கம்மிங் சூன் என எழுதி , கிலிகிலிப்பை, ப்ரெங்னன்ஸி டெஸ்ட் கார்ட், மற்றும் ஷூவை பக்கத்தில் வைத்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தான் தாயாக போகும் விஷயத்தை அறிவித்த ரித்திகாவிற்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...