உடலால் மறைந்தாலும் காலத்தால் மறையாத காமெடி காட்சி.. ‘பிரபா ஒயின்ஸ் ஓனர்’ புகழ் செல்லத்துரை வாழ்வில் நடந்த திருப்புமுனை..

வைகைப்புயல் வடிவேலு குழுவில் பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடித்தவர் நடிகர் செல்லத்துரை. இவர் திரையில் தோன்றும் காட்சிகள், விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

பாக்யராஜ் இயக்கத்தில் உருவான தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தில் தான் செல்லதுரை அறிமுகமானார். அதன்பிறகு  சின்ன பசங்க நாங்க, அம்மா வந்தாச்சு, ராஜகுமாரன், தோழர் பாண்டியன், சத்யன், திருமூர்த்தி, காந்தி பிறந்த மண் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

1990 வரை 2000 ஆண்டுகள் வரை இவர் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். அதிலும் ஒரு கட்டத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் செல்லத்துரை. இந்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு பட்டாசு தான்.

சூர்யா நடித்த ஸ்ரீ என்ற திரைப்படத்தில் பிரபா ஒயின்ஸ் ஓனராக செல்லத்துரை நடித்திருந்த காட்சிகள் இன்று வரை பலரின் பேவரைட் காமெடி காட்சியாகும். இவரது கடையில் தான் வடிவேலு திருடனாக உள்ளே புகுந்து பிரபா ஒயின்ஸ் ஓனரா? எப்ப கடையை திறப்பீங்க என்று போனில் கேட்கும் அந்த காமெடி காட்சி ஒரு சிறந்த மீம் டெம்ப்ளேட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

chelladurai

தமிழில் சுமார் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள செல்லத்துரையின் காமெடி காட்சிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்மையே வெல்லும், பொங்கலோ பொங்கல், தடயம், மூவேந்தர், அண்ணன், நேசம் புதுசு, சுந்தரி நீயும் சுந்தரி நானும், கண்ணன் வருவான், சிம்மாசனம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் சொக்கத்தங்கம், சாமி, வின்னர் ஆகிய படங்களில் இவரது காமெடி காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருக்கும். அதேபோல் காதல் கிறுக்கன்,  ஜித்தன்,  பதவிப்படுத்தும் பாடு ஆகிய படங்களிலும் காமெடியில் கலக்கி இருப்பார்.

கடைசியாக பரத் நடித்த கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்த பின்னர் இவர் திரை உலகில் நடிக்கவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கு வடபழனியில் நடந்த போது ஏராளமான திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

காமெடி நடிகர் செல்லத்துரை மறைந்தாலும் அவரது காமெடி காட்சிகள் இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். மறைந்த செல்லத்துரைக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே சினிமா சம்பந்தம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews