எந்த காரணத்திற்காகவும் இதை செய்யமாட்டேன்… சினேகா பகிர்வு…

புன்னகை அரசி என்றால் அது நடிகை சினேகா என்று தெரியாதோர் இருக்க வாய்ப்பில்லை. தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாவார். 2000 களின் ஆரம்பத்தில் தனது குடும்ப பாங்கான முகத்திற்காகவும், நடிப்புத் திறனுக்காகவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர்.

2001 ஆம் ஆண்டு ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமானார். இப்படத்தில் வரும் ”பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழடைந்தார் சினேகா. இதற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிக்கைக்கான விருதையம் வென்றார்.

அதைத் தொடர்ந்து ‘விரும்புகிறேன்’, ‘புன்னகை தேசம்’, ‘உன்னை நினைத்து’, ‘ஏய், நீ ரொம்ப அழகா இருக்க’, ‘வசீகரா’, ‘பம்மல் கே சம்மந்தம்’, ‘ஜனா’, ‘ஆட்டோகிராப்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜீத், கமலஹாசன், சிம்பு என அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சினேகா.

இது தவிர ‘சரவணா ஸ்டோர்ஸ்’ நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது நல்ல ரீச்சை சினேகா அவர்களுக்குப் பெற்றுத் தந்தது. தனது சக நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சென்னையில் சினேகாலயம் என்ற பட்டு மாளிகையை திறந்து நடத்தி வருகிறார் மற்றும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார் சினேகா.

ஆடை வடிவமைப்பை பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு சினேகா பதிலளித்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் எனக்கு வித விதமான ஆடைகளை வடிவமைத்து அணிய மிகவும் பிடிக்கும், பட்டு சேலைகள் அணிவது எனக்கு விருப்பமான ஒன்று. அப்படி பார்த்து பார்த்து வடிவமைத்த ஆடையை ஒரு தடவைக்கு மேல் அணியும் போது இவங்களுக்கு வேற டிரஸ் இல்லையா என்று என்னை விமர்சித்தார்கள்.

அதனால் அந்த விமர்சனத்திற்குப் பிறகு எந்த ஒரு ஆடையையும் ஒரு தடவைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மறுபடியும் அணிய மாட்டேன். பிறகு அந்த ஆடையை தெரிந்தவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன் என்று பகிர்ந்துள்ளார் நடிகை சினேகா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...