லாங் பிரேக் கொடுத்த நடிகர்.. இன்று முன்னணி குணசித்திர நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!

மிகவும் பரபரப்பாக சினிமாவில் நடித்த ஒருவர் திடீரென நடிப்பிற்கு முழுக்குப் போட்டு 9 வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் யாரென்றால் அது எம்.எஸ். பாஸ்கர்தான்.

ஆரம்ப காலகட்டங்களில் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக பணியாற்றிய இவர் பின் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து சினிமா மீதான ஆர்வம் காரணமாக முயற்சி செய்து தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

1987 ஆம் ஆண்டில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய எம்.எஸ். பாஸ்கருக்கு சிறிய கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. அதன்பின் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில, தெலுங்கு படங்களுக்காக அவர் பின்னனி குரல் கொடுத்தார். 1992 முதல் 2001 வரை அவர் ஒரு தமிழ் சினிமாவில் கூட நடிக்கவில்லை. எனவே 9 வருட இடைவெளி இருந்தது.

2001 ஆம் ஆண்டில் 9 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழ் படங்களில் தலைகாட்டத் துவங்கிய எம்.எஸ்.பாஸ்கர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடித்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் சிறந்த குணசித்திர மற்றும் காமெடி நடிகராக வலம் வருகின்றார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் கொஞ்சும் தமிழுக்கு திரையில் பின்னணி குரல் கொடுத்தவர் இவரது சகோதரி ஹேமா என்பது பலருக்கும் தெரியாத விஷயம். மற்றொரு சகோதரி பாலிவுட் படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவர்.

சின்னப்பாப்பா பெரியபாப்பா தொடரில் பட்டாபியாக நடித்து ரசிகர்கள் வயிற்றைப் பதம் பார்த்தவர். அதன்பின் அரசி, செல்வி என 12க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்தார். வெள்ளித் திரையில் 8 தோட்டாக்கள், தர்மதுரை, மொழி ஆகிய படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

டபுள் சந்தோஷத்தில் CWC புகழ் : புகழுக்கே புகழா?!

காமெடி கதாபாத்திரங்களிலும் தனது பாடிலாங்குவேஜால் கவனம் ஈர்த்தார் எம்.எஸ் பாஸ்கர். விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில் இவர் குடிகாரனாக வந்து பாண்டியராஜன், வடிவேலுவுடன் செய்யும் காட்சிகள் இன்றும் அப்ளாஸ் வாங்கும் காமெடி.

இவரது நடிப்பை ரசிக்காத ரசிகர்களே இல்லை. காமெடியாகட்டும், குணச்சித்திர வேடமாகட்டும் அனைத்திலும் அற்புதமான முகபாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலிலும் ஆழ்த்துபவர். ஒரு டப்பிங் கலைஞராக சினிமாவில் பணியை ஆரம்பித்து பின் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது எம்.எஸ்.பாஸ்கர்தான். 96 படத்தில் சிறுவயது ராம் விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
John

Recent Posts