வரும்.. ஆனா வராது..! டைமிங் டயலாக்கில் முன்னணி காமெடியன்களுக்கே சவால் விட்ட என்னத்த கண்ணையா

வடிவேலுவின் இந்தக் காமெடியை என்றென்றும் மறக்க முடியாது. தொட்டால் பூ மலரும் படத்தில் இடம்பெற்ற காமெடி அது. அந்த காட்சியில் வடிவேலுவுடன் ‘வரும் ஆனா வராது‘ என்ற ஒரே வசனத்தில் தனது பல்லாண்டு கால சினிமா வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை கொடுத்தவர் என்றால் அவர் என்னத்த கண்ணையா தான்.

பழம்பெரும் நடிகரான இவருக்கு இந்தப் பெயர் வந்தது தனி சுவாரஸ்யம். 1967-ல் வெளிவந்த நான் திரைப்படத்தில் இவர் அவநம்பிக்கையாய் பேசும் வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் என்னத்த செய்ய என்ற வார்த்தைய சலிப்பாக அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்ததால் பின்னாளில் அதுவே அவருக்கு அடைமொழியாக மாறியது.

பின்னர் எம்ஜிஆர், சிவாஜி அவர்கள் படங்களில் நடித்து பின்னர் ரஜினி அவர்களுடன் தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் போதிய வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். வாய்ப்புக்காக தன் இறுதி காலம் வரை போராடி கொண்டே இருந்தார்.

இந்தப் பாட்டை எழுதியது இவரா? நடிகை ரோகிணியின் அறியாத பக்கங்கள்

2007-ம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் வடிவேல் அவர்களுடன் கண் தெரியாத ஒரு ஓட்டுநராக நடித்திருப்பார் ‘வரும் ஆனா வராது‘ இந்த வசனம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

Kannaiha

அதுவும் குழந்தைகளிடம் ‘வரும் வராது‘ வசனம் மிகவும் புகழ் பெற்றிருந்தது. பின்னர் மிடில் கிளாஸ் மாதவன் என்ற திரைப்படத்தில் வடிவேலு அப்பாவாக என்னத்த கண்ணையா நடித்திருப்பார். வடிவேல் அவர்களிடம் தினமும் இரவு பயந்து நடந்து கொண்டிருக்கும் அப்பாவாக இயற்கையாகவே நடித்திருப்பார் என்னத்த கண்ணையா அவர்கள்.

சில வசனங்களில் வடிவேலு விட அசத்தி இருப்பார். நீங்கள் எம்ஜிஆர் போல் தகதகன்னு இருக்கிறீர்கள் என்றும் எவனோ விசில் ஊதுறான் என்று கூறும் இவரின் டைமிங் காமெடிகள் அதிகம். சில நேரங்களில் தன்னுடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு கூட வராத டைமிங் வசனங்களை பேசி அசத்துவது அவரது வாடிக்கை.

இதனால் புகழ் பெற்ற அந்த நகைச்சுவை நடிகர்கள் இவரை வளர விடக்கூடாது என்று முட்டுக்கட்டைபோட  பல தோல்விகள் அடைந்து கடைசி வரைக்கும் வாய்ப்புக்காக போராடிக் கொண்டே இருந்தார் பின்னர் 87 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews