தீபாவளிக்கான வண்ண வண்ண மத்தாப்புகள்!!

வருடத்தில் 1000 பண்டிகைகள் இருந்தாலும் மனம் மகிழ்ந்து மிகுந்த ஆர்வத்துடன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கொண்டாடுவது தீபாவளியை மட்டுமே ஆகும்.

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஞாபகத்திற்கு வருவது வண்ண வண்ண மத்தாப்புகள் தான். வயது வித்தியாசம் இல்லாமல் அவரவர்க்கு என்று பல வகைகளில் பட்டாசுகள் கிடைக்கும்.


தீபாவளிக்கு 8 மாதங்களுக்கு முன்பு இருந்தே சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கும் வேலைகள் தொடங்கிவிடும், அதன்பின்னர் அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதியாகி ஆங்காங்கே கடைகளில் நமக்கு கிடைக்கும்.

சங்குச் சக்கரம், கலசம், கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி கலர் மத்தாப்பு, குதிரை வால், பென்சில், சாட்டை, ஊசி வெடி, ராக்கெட், பாம்பு பட்டாசு, ஓலை வெடி, அணு குண்டு, சரவெடி என அனைத்து வயதிற்கும் ஏற்ற வண்ண வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்வர்.

மற்ற எந்தப் பண்டிகைக்கும் நாம் இந்த அளவு பொருட்களை வாங்கி கொண்டாடுவது கிடையாது, அதனால்தான் கடைகளில்கூட 50 சதவீதம் வரையில் தள்ளுபடிகள் கிடைக்கிறது.   

Published by
Staff

Recent Posts