நம்ம முதல்வர் ஸ்டாலினா இது : சினிமாவுல இப்படி ஒரு பஞ்ச் வசனமா?

பேரறிஞர் அண்ணா, எம்.ஜிர்.ஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோர் திராவிடக் கொள்கைகளை திரைப்படங்கள் வாயிலாக புகுத்தி மக்களை விழிப்புணர்வு அடைய செய்தனர். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க திராவிடக் கட்சிகளுக்கு திரைத்துறை எளிய முறையில் தங்களது கருத்துக்களைப் பரப்பும் ஊடகமாக இருந்தது. தங்களது நடிப்பிலும், வசனங்களிலும், எழுத்துக்களிலும் கொண்ட வீச்சுகள், தாக்கம் ஆகியவை மக்களை எழுச்சியடைய வைத்தது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் அந்த பாணியைப் பின்பற்றி வந்தவர் தான். ஆரம்பத்திலிருந்தே திமுக கொள்கைகளைப் பரப்பினாலும் சில படங்களிலும், மேடை நாடகங்களில் நடிகராகத் தோன்றியும் திமுகவை வளர்த்தார். அவ்வாறு அவர் நடித்த படம் தான் ஒரே இரத்தம். நவரச நாயகன் கார்த்திக், ராதாரவி, பாண்டியன் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை சொர்ணம் என்பவர் இயக்கியுள்ளார்.

இதுக்கு மேல ஒண்ணும் மிச்சமில்ல.. அரசியல்ல களம் இறங்குங்க.. உலக நாயகனை வாழ்த்திய சிவக்குமார்

குங்குமம் இதழில் வெளியான கலைஞர் கருணாநிதியின் தொடர்கதையை சினிமாவாக எடுக்க அதற்கும் கலைஞர் வசனங்கள் இயற்றி தனது வாரிசு மு.க.ஸ்டாலின் வாயிலாக திமுக கொள்கைகளை அப்படத்தில் புகுத்தினார்.

இதில் நந்தகுமார் என்ற படித்த இளைஞன் கதாபாத்திரத்தில் மு.க.ஸ்டாலின் நடித்திருப்பார். இப்படத்தில் உழைக்க ஒரு வர்க்கம், உண்டு செழிக்க ஒரு வர்க்கம் இந்த சமூக அவலத்தை மாற்ற ஒரு பெரிய புரட்சி பண்ணனும் என்று அதிகார வர்க்கத்திற்கு எதிராக அவர் பேசும் வசனங்கள் கலைஞரின் பேனா முனை என்னும் ஆயுதத்தால் கூர் தீட்டப்பட்ட வசனங்கள்.

மேலும் இதேபோல் 1988-ல் மக்கள் ஆணையிட்டால் என்ற படத்திலும் நடித்துள்ளார். ராம. நாராயணன் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த்துடன் முதல்வர் ஸ்டாலின் நடித்த இந்தப் படத்தில் ஒரு பாடலில் தி.மு.க கொடியை ஸ்டாலின் பிடித்துக் கொண்டிருப்பார்.

இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்

இந்த படங்கள் தவிர குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சி தொடரிலும் ஸ்டாலின் நடித்துள்ளார். இந்தத் தொடர் வெற்றியடைந்து 1980களில் திமுக தொண்டர்களிடையே பிரபலமடைந்தது. திராவிட இலட்சியங்களைக் கொண்ட இளம் கவிஞரான அரவிந்தன் கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடித்தார்.

இவ்வாறு திராவிடக் கொள்கைளை திரைப்படங்கள் வாயிலாக புகுத்தி மக்களிடையே கொண்டு சேர்த்து தந்தை வழியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் மு.க.ஸ்டாலின்.

Published by
John

Recent Posts