இதுக்கு மேல ஒண்ணும் மிச்சமில்ல.. அரசியல்ல களம் இறங்குங்க.. உலக நாயகனை வாழ்த்திய சிவக்குமார்

நடிப்பு என்று வந்துவிட்டால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. திரையுலகில் இவர் செய்யாத முயற்சிகளே இல்லை. அதனால் தான் இவரை உலக சினிமாவே கொண்டாடி உலக நாயகனாக ஜொலிக்க வைக்கிறது. இவரை அலங்கரிக்காத விருதுகளும், பட்டங்களும் இல்லை.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 1954 நவ.7-ல் பிறந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாகவும், அதன்பின் டான்ஸ் மாஸ்டராகவும் தனது திரைப் பயணத்தை தொடங்கியவர்.

நாளை அவரது பிறந்த நாள் என்பதால் பல்வேறு திரையுலகைச் சேர்ந்தவர்களும் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும்வேளையில் இவர் காலத்து நடிகரான சிவக்குமார் தற்போது உலக நாயகனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில், ”நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் போற்றப்படுபவர்கள் தமிழ் சினிமாவில்  நடிகர் திலகமும், உலக நாயகன் கமல்ஹாசனும் தான். அவர் செய்த வெரைட்டி ரோல்களை இதுவரை யாராலும் செய்ய முடியவில்லை. 8 படங்களில் நாம் சேர்ந்து நடித்தோம்.

வில்லன் வேடங்களில் நடித்து ஹீரோவாக உயர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான். நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு ஏதும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் திரையில் சாதித்ததை, அரசியலிலும் சாதிக்க இயலும், துணிந்து இறங்குங்கள்” என்று தனது வாழ்த்துச் செய்தியில் கமல்ஹாசனைப் பாராட்டியுள்ளார்.

தல அஜீத்-க்கு பின்னணி பாடிய உலக நாயகன் : இந்தப் படத்துல இவ்வேளா ஸ்பெஷல் இருக்கா?

ஏற்கனவே விஜய் அரசியலில் எப்போது இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில் சிவக்குமாரின் இந்தப் பிறந்தநாள் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. ஏனெனில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பலர் மாற்றுக்கட்சிக்குத் தாவ தற்போது பெயரளவில் மட்டுமே கட்சி செயல்படுகிறது.

ரஜினியும் தொடர்ந்து அரசியல் நுழைவது குறித்து பேசி ஒரு கட்டத்தில் அரசியல் வேண்டாம் என முற்றிலும் ஒதுங்கி தற்போது நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் அதிரடியாகக் கட்சியைத் துவங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தற்போது பிக்பாஸ் மற்றும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருக்கும் உலகநாயகன் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தி அரசியலிலும் சாதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews