சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

தமிழ் சினிமாவில் பல்வேறு ஹீரோக்கள் வந்து சென்றாலும் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பது மிக பெரிய போராட்டம். அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது தல அஜித். இவரை பார்ப்பதற்கு என பல ரசிகர்கள் ஒடி வருகிறார்கள். இவர் தற்போது இப்படி இருப்பதற்கு இவரது ஆரம்ப கட்டத்தில் ஒரு சில படங்கள் அதிகமாகவே கைகொடுத்துள்ளது.

valimai ajith

இவரின் நடிப்புக்கும் சினிமா வாழ்விற்கும் முக்கியமான படங்களில் சிட்டிசன் படமும் ஒன்று. இப்படத்தை சரவணா முத்தையா என்பவர் இயக்கினார். ரவி கே சந்திரன் (ஒளிப்பதிவாளர்),தேவா(இசையமைப்பாளர்), பாலகுமாரன்(வசனகர்த்தா),ஸ்ரீகர் பிரசாத்(படத்தொகுப்பாளர்) என இவருக்கு அமைந்தது போல் ஒரு தொழில்நுட்ப அணி மற்றொரு அறிமுக இயக்குனருக்கு அமைந்திருக்கவில்லை. இப்படிபட்ட படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லை. இது அவருக்கு வந்த வாய்ப்பும் இல்லை.

துணிவு படத்தில் இப்படி 3 பாடல்களா? வெளியான மாஸ் அப்டேட்!

முதன் முதலில் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உலக நாயகன் கமல் அவர்களுக்குத்தான். எதற்கு கமலை தேர்ந்தேடுத்தார் என்றால் இந்த படத்தில் அதிகமான கெட்டப் மாற்றி நடிக்க வேண்டிருக்கும் இதற்க்கு பொருத்தமான நடிகர் கமல் என்றுதான் அவரை தேர்வு செய்தனர்.ஆனால் அந்த நேரத்தில் ஹேராம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிருந்தார். மேலேம் அவர் இப்படத்திற்க்காக அதிகமான முடியும் வளர்த்து இருந்தார்.

அஜித்துடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்! கலக்கலான போட்டோஸ்!

இதனால் கமல் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு அஜித் பக்கம் திரும்பியது. அஜித் உடனே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இதனை அடுத்து அஜித்தை வைத்து இயக்குனர் சரவணா முத்தையா இப்படத்தை முடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக வெற்றி பெற்றது. மேலும் அஜித்தின் நடிப்பு திறனும் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்ததை கூறியுள்ளார் சரவணா முத்தையா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.