துணிவு படத்தில் இப்படி 3 பாடல்களா? வெளியான மாஸ் அப்டேட்!

அஜித்தின் துணிவு திரைப்படம் தற்போழுது வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது,இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது.

சில்லா சில்லா என பெயரிடப்பட்டுள்ள ஒரு பாடலை சமீபத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் ஒரு பேட்டியில் பேசிய அனிருத், இந்த பாடல் தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் பைத்தியம் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் சஞ்சய் தத், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வங்கி கொள்ளை மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கு வருவதாக, படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சில்லா சில்லா பாடல் குறித்து மாஸான புதிய போஸ்டர் வெளியானது. இந்த அப்டேட்டை ரசிகர்கள் வைரலாகி வந்தனர்.

இந்நிலையில் துணிவு படத்தின் மேலும் 3 பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டர் என அந்த பாடல் தலைப்புக்கள் ஆகும்.

இரட்டை குழந்தை பிறந்த யோகம் .. பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் இணையும் நயன்!

‘சில்லா..சில்லா’ பாடலின் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...