தேவ் எப்படி உள்ளது- விமர்சனம்

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் புதியவர் ரஜத் ரவிசங்கர் இயக்கி இருக்கும் படம் தேவ். ரிச்நெஸ் காதல் படங்கள் எப்போதும் நம் மனதில் உட்கார மறுக்கும். பெரும்பாலான படங்கள் அப்படியானவையே.

96f47c0f47e4411bccb9afc3a7023a82

காதல் போன்ற மெக்கானிக் அழுக்கு வாலிபனின் இயல்பான காதல் படங்களை மட்டுமே நம் மக்களுக்கு பிடிக்கும்.

தேவ் அப்படியான ஒரு ரிச்சான கதாபாத்திரங்கள் உள்ள கதையாக இருப்பதால் ஒட்ட மறுக்கிறது உடன்பட மறுக்கிறது என்பது படம் பார்த்தவர்களின் கருத்து. கூடவே ஒரு ட்ரெண்ட் செட்டாக இது போல படங்களுக்கு எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜை இசையமைக்க வைத்தால் அது அல்ட்ரா மாடர்ன் லுக்கில் வரும் என்று நினைக்கிறார்கள் அடித்த அதே அடியையும் அடி பிறழாமல் அதே சாயலில் உள்ள பாடல்களையும் ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கி இருப்பதாக பார்த்த ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சாதாரண ரிச் வாலிபர் கார்த்தி அமெரிக்காவில் உள்ள இளம் தொழில் அதிபர் ரகுல் ப்ரீத் சிங்கை பேஸ்புக் மூலம் காதலிப்பதுதான் தேவ் படத்தின் கதை.

கார்த்தியும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மட்டுமே படத்தின் ப்ளஸ்ஸாக சொல்லப்படுகிறது.

காட்சிகளில் அதிக தொய்வு இருப்பதாக ரசிகர்களின் கருத்தை பார்க்க முடிகிறது.

கார்த்தியின் உற்சாகமான நடிப்புக்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறுகிறார்கள் .

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...