நீ நதி போல ஓடிக்கொண்டிரு- விஜய் பிறந்த நாள் இன்று

கடந்த 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலம் தன் தந்தையால் அறிமுகம் செய்யப்பட்ட விஜய்க்கு சினிமா புதிதல்ல அதற்கு முன்பே விஜயகாந்த்தை வைத்து அவர் தந்தை இயக்கிய பல படங்களில் சிறுவயது விஜயகாந்த் ஆக விஜய்தான் நடித்திருப்பார்.

9e58a73df3ff363c41516bd116d19813

ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருப்பார். இது எங்கள் நீதி உள்ளிட்ட படத்தில் ப்ளஸ் டூ மாணவனாக நடித்திருந்தார். இந்த நாளைய தீர்ப்பை பொறுத்தவரை கதாநாயகனாக அறிமுகமே தவிர சினிமாவில் அவர் புதிய அறிமுகம் இல்லை.

ஆரம்ப கால விஜய் படங்கள் கொஞ்சம், மசாலா,கவர்ச்சி, ஆக்சன் அடிப்படையிலேயே வந்தன அந்த அடிப்படையிலேயே அவரது படங்கள் இன்று வரை வருகின்றன. அந்த பாணியிலேயே அவர் வெற்றியும் கண்டு வருகிறார்.

ஆரம்பத்தில் விஜய்யின் ஆக்சன் படங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது செந்தூரபாண்டி திரைப்படம். விஜய்யின் ஆக்சன் படங்களுக்கு முன்னோடி இந்த படம். எஸ்.ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க விஜய்யின் வளர்ச்சிக்காக விஜயகாந்த் இப்படத்தில் நடித்து கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் அப்படி இப்படியுமாக ஒரு சீரான அலைவரிசை இல்லாமல் விஜய்யின் படங்கள் வந்து கொண்டிருந்தது விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக, பாஸில் இயக்கிய காதலுக்கு மரியாதை இரண்டும் விஜய்யின் மார்க்கெட்டை ஒரே நேரத்தில் உயர்த்தி பிடித்தன. அதன் பிறகு வந்த துள்ளாத மனமும் துள்ளும் விஜய்யின் மார்க்கெட்டை மிக உயர்வாக்கி விட்டது.

அதன் பிறகு விஜய் பல படங்களில் நடித்தாலும் கலவையான படங்களாகவே இருந்தன ப்ரண்ட்ஸ், வசீகரா உள்ளிட்ட காமெடி கலந்த படங்கள்,தமிழன், நெஞ்சினிலே உள்ளிட்ட ஓரளவு ஆக்சன் உள்ள படங்கள் என கலந்து கட்டி நடித்து வந்தார்.

கில்லி படம் வந்த பிறகுதான் ஆக்சன் ப்ளஸ் மாஸ் அம்சம் கொண்ட படங்களை கையில் எடுக்க தொடங்கினார் விஜய். திருப்பாச்சி, சிவகாசி, மதுர, திருமலை, போக்கிரி, வில்லு என மாஸ் பெர்பார்ம் கொண்ட படங்களில் நடிக்க துவங்கினார்.

ரஜினிகாந்த் தொடங்கி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வரை மாஸ் சண்டைக்காட்சிகள், மாஸ் ஓபனிங் உள்ள படங்களே இன்று வரை கை கொடுத்து வருகின்றன. இளம் நடிகரான விஜய் இந்த பாணியை கில்லி படத்தில் இருந்து கடை பிடித்து வருகிறார்.

இன்று வரை அவரின் தெறி, மெர்சல், சர்கார், என எல்லாமே மாஸ் படங்கள்தான் பிகில் பட போஸ்டரிலேயே மாஸ் காண்பிக்கிறார்கள்.

விஜய்யின் ப்ளஸ் என்ன என்று கேட்டால் நகைச்சுவை காட்சிகளில் நன்றாக நடிப்பது, ஆக்சனில் பட்டைய கிளப்புவது, டான்ஸ் ஆடுவது, சிறு குழந்தைகள் அனைவருக்கும் விஜயை பிடிப்பது இதுதான் விஜய்யின் ப்ளஸ் பாயிண்ட்.

அவரின் பாடல் வரி போல அடுத்த இலக்கை நோக்கி நதி போல ஓடிக்கொண்டேதான் இருக்கிறார் விஜய்.

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews