மனிதனை மனிதனே பலியிட்டுகொண்ட நவகண்ட பலி- அந்தக்கால நடைமுறை

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் மனிதர்கள், தன் அரசன்/தலைவன்/ ஊர்  பாதிக்கப்படும் போது அவற்றைக் காக்க காளியிடம் முறையிடுவார்கள். தன் கோரிக்கையை காளி நிறைவேற்றினால் தன் உயிரை காணிக்கையாக தருவதாக வேண்டிக் கொள்வார்கள்.  அவ்வாறு அவர்களின் கோரிக்கை நிறைவேறிய பின் காளி கோவில் முன் தன் தலையைத் தானே வெட்டி காளிக்கு தானமாகத் தருவர்.


ஊரின் நலனிற்காகவோ, அரசனுக்காகவோ, தங்களை தாங்களே பலியிடும் வழக்கம் சங்ககாலம் முதல் சோழர்கள் காலம்வரை இந்நிகழ்வு இருந்துள்ளது! இந்நிகழ்வை நவகண்டம்,அரிகண்டம் என்ற பெயர்களில் அழைத்திருக்கின்றார்கள் மேலும் அவ்வாறு பலியிட்டு இறந்த வீரனின் நினைவாக அவனுக்கு ஒரு சிற்பம் செதுக்கி வழிபட்டும் இருக்கிறார்கள்.

இது பற்றிய ஆய்வுகளை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ராஜகுரு என்பவர் ஆராய்ந்து வருகிறார்.

இந்த நவகண்டம் அரிகண்டம் பற்றி இக்காணொளி விளக்குகிறது.

Published by
Staff

Recent Posts