இதுதாண்டா பர்ஸ்ட்லுக் போஸ்டர்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்


549b3c854f57c3bd0ae3a427dcf1d468

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது

கெத்தாக சிவகார்த்திகேயன் உட்கார்ந்திருக்கும் இந்த போஸ்டரில் பல மர்மங்கள் அடங்கியிருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்

டாக்டர்கள் உபயோகப்படுத்தும் உபகரணங்கள், சிவகார்த்திகேயன் கையில் உள்ள ரத்தக்கறை ஆகியவை ஆயிரம் கதைகளை கூறுவதாகவும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸாக இருப்பதாகவும் ’இதுதாண்டா ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அனிருத் இந்த படத்திற்காக ஆறு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் விரைவில் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.