மாஸ்டர் விஜய்யை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட தனுஷ்!


879a2d1a30b6a8aadb3eac67ff84f235

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் வியாபார பாணியை கிட்டத்தட்ட தனுஷின் படம் நெருங்கிவிட்டதாக கூறப்படுவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் வியாபாரம் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே முடிந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. மாஸர் படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல், தமிழக ரிலீஸ் உரிமை, தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை உள்பட அனைத்து வியாபாரமும் முடிந்துவிட்டது

இந்த நிலையில் மாஸ்டர் படம் போலவே தனுஷின் 40வது படத்தின் வியாபாரமும் அந்த படத்திற்கு டைட்டில் வைக்க முன்னரே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷ் 40 வது படத்தின் வியாபாரம் குறித்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்தப் படத்தின் தமிழக உரிமையை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், இதனையடுத்து தெலுங்கு, மலையாளம், ஓவர்சீஸ் உரிமைகளை வாங்கியுள்ள நிறுவனங்களின் பட்டியலையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.