தளபதியின் பாட்டுக்கு நடனமாடிய சிஷ்யர் சாந்தனு

நடிகர் சாந்தனுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது இயக்குனர் மற்றும்ன் நடிகருமான பாக்யராஜ் அவர்களின் புதல்வன். அநியாயத்துக்கு விஜய் ரசிகராக இருக்கும் இவரை விஜய் ரசிகர் என்று சொல்வதை விட வெறியர் என்று சொல்லலாம்.


தனது திருமணத்துக்கு கூட விஜய் வந்து தாலி எடுத்து கொடுத்தால்தான் கட்டுவேன் என்ற அடிப்படையில் விஜய்தான் தாலி எடுத்து கொடுத்தார்.

விஜய் ரசிகராக இருப்பதாலோ என்னவோ அவரின் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாடலான வாத்தி கம்ம்னிங் ஒத்து என்ற பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

இந்த பாடலுக்கு விஜய்யின் நடனத்தை பார்க்கும் முன்பே அவரின் சிஷ்யரின் நடனத்தை பார்த்து விட்டார்கள் ரசிகர்கள்.

நடிகர் ஆர்யா இந்த டான்ஸை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Staff

Recent Posts