இறந்ததாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டு வந்த வடகொரியா அதிபர்

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன். வட கொரியாவில் மிகப்பெரும் அளவில் 70 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2011ல் தந்தையின் மறைவுக்கு பிறகு மிக குறைந்த வயதில் அந்த நாட்டின் அதிபராக தொடர்கிறார் கிம் ஜாங் உன்.

87c122e671a8d3f9acb6a7ded0f2cdcb

அதிரடிக்கு சொந்தக்காரரான இவர் தவறு செய்த தன் தளபதியை கொலை செய்து நாய்க்கு உணவாக இட்டார் என்றெல்லாம் இவரை பற்றி பீதி கிளப்பும் செய்திகள் சில வருடங்கள் முன் வெளியானது.

தனது படைத்தளபதிகளுடன் ராணுவ ஆலோசனையில் அடிக்கடி ஈடுபட்டு வரும் இவர் அமெரிக்காவை அலற விட்டவர் எனக்கூட சொல்லலாம். ஏவுகணையை விட்டு விடுவேன் என இவர் மிரட்டி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் இறந்து விட்டார் என்ற வதந்தி பரவியது. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் சில நாட்களாக வெளியுலகத்துக்கும் அரசு சார்ந்த எந்த ஒரு விசயத்திலும் காணாமல் இருந்தது அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில் இவர் உயிருடன் தான் இருக்கிறார். ஒரு ரசாயன தொழிற்சாலையை இவர் திறந்து வைத்தார் என்ற புகைப்படத்தை நேற்று வடகொரியா வெளியிட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews