புண்ணியம் சேர்க்கும் பீஷ்மாஷ்டமி


தான் விரும்பும் நேரத்தில் மரணத்தை தேடிக்கொள்ளும் வரத்தை வாங்கியிருந்த பீஷ்மரின் உடல் குருஷேத்திர போரில் அர்ஜுனன் விட்ட அம்புமழையால் துளைக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி உத்ராயணம் காலம் முடிய காத்திருந்தார். உத்ராயணம் காலம் முடிந்தும் உயிர்பிரியாததால் வியாசரிடம் காரணம் கேட்க திரௌபதியின் துகில் உரிப்பின்போது அரசவையில் இருந்தும் தவறினை தட்டிக்கேட்காமல் தவறினை கண்டும் காணாமல் நின்றிருந்த பாவமே காரணமென வியாசர் சொல்லி, அதற்கான பரிகாரமாய் ரத சப்தமி விரதமுறைகளை சொல்லி செய்தார்.

பீஷ்மரின் உயிரும் பிரிந்தது. அவருக்கு திருமணம் ஆகாததால் வாரிசு ஏதுமில்லை. அதனால் அவருக்கான இறுதி சடங்கை செய்விக்கவும், சிரார்த்தம் கொடுக்கவும் ஆளில்லாததை கண்டு தருமர் மனம் நொந்தார்,. ‘வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒருநிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும்.ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்’ என்று ஆறுதல் சொன்னார்.

ஆகவேதான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.

பீஷ்மாஷ்டமியன்று தகப்பனார் உள்ளவர்கள்,  இல்லாதவர்கள் என யாரும் பீஷ்மருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி அர்க்யம் விட வேண்டும்.

வையாக்ரபாதி கோத்ராய
ஸாங்க்ருதி ப்ரவராய ச
கங்காபுத்ராய பீஷ்மாய
ஆஜந்ம ப்ரஹ்மசாரிணே
பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம்,இதமர்க்யம்.

இந்த பீஷ்மாஷ்டமியை கடைப்பிடிப்பவரின் 21 தலைமுறைகள் இந்த புண்ணியத்தை பெறும்.

Published by
Staff

Recent Posts