கொரோனாவே பாதிக்காத ஒரே மாநிலம்

ஊர் உலகத்தையே கொரோனா தூக்கி போட்டு மிதித்து கொண்டிருக்க, ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பே இல்லாதது ஒரு ஆச்சரியமான விசயம்தான். வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநிலம்தான் அது.

இதுகுறித்து மாநில அதிகாரிகள் கூறுகையில், ‘சிக்கிமில் மார்ச் 5ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை செய்யப்பட்டனர்.

சிக்கிமில் புகழ்பெற்ற நாதுலாவுக்கு வருகைக்கான அனுமதிமறுக்கப்பட்டது.

ca81eb414c9748007a0151cc01cc03ff

வெளி நாட்டுப் பயணிகளுக்கான இன்னர் லைன் பெர்மிட்டுகள் தடை செய்யப்பட்டது அம்மாநில அரசு இதுவரை எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளாகும்.

முதல்வர் பிரேம்சிங் தமங் தலைமையிலுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா ஆட்சி நாதுலா எல்லை அருகே சீன-இந்தியா வர்த்தகத்தையும் தடை செய்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமே சிக்கிம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...