ஜிவி பிரகாஷ் பட இயக்குனர் விபத்தில் மரணம்- ஜிவி பிரகாஷ் இரங்கல்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் 4ஜி என்ற படத்தை இயக்கி வந்தவர் வெங்கட் பாக்கர் என்ற இயக்குனர். சில வருடங்கள் முன் பூஜை போடப்பட்டு படம் ரீலீஸ் ஆகவில்லை. வரும் நவம்பர் 2020 ல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது இப்படம்.

74f6d33bdbaf91ff1c862abaf150fbc6

இதனிடையே இப்பட இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்து விட்டதாக ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள டுவிட் மூலம் தெரிகிறது.

தன் பட இயக்குனரான வெங்கட் பாக்கரின் மறைவிற்கு ஜிவி பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்… அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...