நவராத்திரி ஸ்பெஷல்- காரைக்குடி கொப்புடையம்மன் கோவில்

காரைக்குடி நகரில் அலுவல் காரணமாக பேசுபவர்கள், தொழில் ரீதியாக பேசிக்கொள்பவர்கள் இந்த இடத்தை உச்சரிக்காமல் இருக்க மாட்டார்கள் ஏனென்றால் காரைக்குடி நகரின் முக்கிய அடையாளமாக இந்த கோவில் உள்ளதால் நீ அந்த கோவில் வந்துரு என அடையாளமாக இக்கோவில் இந்த இடத்தை அடையாளம் சொல்லி சொல்வார்கள்.


இந்த கோவிலில் மூலவரே உற்சவராக இருப்பதுதான் விசேஷம். பல கோவில்களில் உற்சவர் தனியாக மூலவர் தனியாகத்தான் இருப்பார்கள் இங்கு மட்டும் உற்சவரும் மூலவரும் ஒன்றே.

பாரம்பரியமான செட்டி நாட்டு சீமையின் தலை நகரமான காரைக்குடியில் இக்கோவில் இருப்பதால் பக்தி பாரம்பரியத்துடன் இக்கோவில் அழகாக பரமாரிக்கப்பட்டு நகரின் நடு நாயகமாக இக்கோவில் விளங்குகிறது. காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

ஒற்றுமையில்லாத தம்பதிகள் பலருக்கு இந்த அம்மனின் கருணைப்பார்வை பட்டால் குடும்ப வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. தோல் நோய்கள் தீர்க்கும் தலமாகவும் இது இருக்கிறது.

இக்கோவிலில் நவராத்திரி வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

Published by
Staff

Recent Posts