பைசாகி திருவிழாவினை தெரியுமா?!


சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள்  சித்திரை 1ஐ பைசாகி என்று கொண்டாடுகின்றனர்.   விக்ரம நாட்காட்டியின் முதல் மாதம்  பைசாகம் ஆகும். பைசாகத்தின் முதல் நாளை பைசாகி திருவிழாவாய் கொண்டாடப்படுகிறார்கள்.   ஜம்முவில் இப்பண்டிகையை அறுவடை திருநாளாய்கொண்டாடப்படுகிறார்கள். திருமணம் போன்ற மங்களகரமான நாட்களை நடத்தை ஏற்ற மங்களகரநாளாக இந்நாளை கருதுகின்றனர்.  இநாளில் ஆறு, குளங்களில் நீராடுவதை முக்கிய நிகழ்வாய் கொண்டுள்ளனர். இந்நாளில் அறுவடையான பொருட்களை விற்பனை செய்ய பெரும் சந்தை உருவாகும். பல்வேறு இன்னிசை கச்சேரிகள் நடைப்பெறும். முக்கியமாய் பஞ்சாப்பின் பாரம்பரிய நடனமான பாங்க்ரா நடனநிகழ்ச்சி நடக்கும். ஆடை அணிகலன், வீட்டு உபயோகப்பொருட்களும் கடைவிரிக்கப்படும்.  


1699ம் ஆண்டு  சீக்கிய மதத்தின் கால்சா என்ற பிரிவை  பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங்உருவாக்கியதால் இந்நாளை கால்சா பிரிவினர் வெகுவிமர்சையாய் கொண்டாடுகின்றனர்.  இந்நாளில் கரும்புசாறும், பாஸ்மதி அரிசியினாலுமான பாயசத்தை உண்கின்றனர். 

Published by
Staff

Recent Posts