சமூக இடைவெளியுடன் தரிசிக்க திருப்பதி கோவில்- திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

உலகப்புகழ்பெற்றது திருப்பதி கோவில் .ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இக்கோவில். தினசரி இங்குள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் இருப்பர். எப்போதுமே திருவிழாக்கோலத்துடனே காட்சியளிப்பதுதான் திருப்பதியின் சிறப்பு.


பணக்கார கடவுளான ஏழுமலையானை தரிசித்தால் வாழ்வில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்ற அடிப்படையில் அனைவரும் இவரை தரிசிக்க வருகிறார்கள்.

இந்த கோவில் வரலாற்றிலேயே இல்லாத அளவு கடந்த 2 மாதமாக கொரோனா லாக் டவுனால், கோவில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் மனதளவில் சோர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விரைவில் கோவில் திறக்க அனுமதி வரும் என்ற நம்பிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

Published by
Staff

Recent Posts