அம்மனுக்கு பிடித்த பால் பாயசம் செய்வது எப்படி?!

3209909bc3b46f92e6df225dcdcb50c9-1

அம்மனுக்குகந்த வெள்ளிக்கிழமைகளில் கூழ் வைத்து வழிபடுவது வழக்கம். கூழ், கருவாட்டு குழம்பு, பொங்கல், முருங்கைக்கீரை பொரியல், கொழுக்கட்டை, வடை, சுழியம், அரைக்கீரை மசியல்..இவையெல்லாம் வீடுகளில் அம்மனுக்கு வைத்து வழிபடுவர். கோவில்களில் சர்க்கரை பொங்கலும், பால் பாயாசம் வைத்து வழிபடுவது சிறப்பு.

1c1369309ece1fc16b38af670ac93492-1

பால் பாயாசம் செய்வது எப்படி என பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:
முந்திரி – 25
உலர் திராட்சை – 1 டீஸ்பூன்
பாதாம் -2 டீஸ்பூன்
சேமியா – 1 கப்
தண்ணீர் – 2 கப்
ஜவ்வரிசி – 1/4 கப்
பால் – 3 1/2 கப்
சர்க்கரை – 1 கப்

ec7e4f7c4bdaa2fbab39641658564bf4-1

செய்முறை:
அடிக்கனமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, முந்திரி, உலர் திராட்சை, பாதாம் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுத்து கொள்ளவும். சேமியாவை சிவக்க வறுத்து கொள்ளவும்.

பின்னர், பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஜவ்வரிசியை போட்டு ஜவ்வரிசி வேகும் வரை மூடி வைக்கவும். ஜவ்வரிசி வெந்ததும், அதில் வறுத்த சேமியாவைப் போட்டு நன்கு கிளறி விட்டு கொதிக்க வைத்திருந்த பாலை ஊற்றவும். பிறகு, இதனுடன் சர்க்கரை சேர்த்து சேமியாவை நன்கு வேகவைக்க வேண்டும். கடைசியாக, சேமியா வெந்ததும், நல்ல மணத்துடன் வறுத்து வைத்திருந்த முந்திரி , பாதாமைச் சேர்க்க வேண்டும். வாசனைக்கு ஏலக்காய் பொடியை சேர்க்கலாம்.

அம்மனுக்கு இந்த பாயாசத்தினை நைவேத்தியம் செய்து, பின்னர் தானம் செய்தால் அம்மன் அருள் கிட்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews