எம்.ஜி ஆரை கிண்டல் செய்தவர்களுக்கு சோ கொடுத்த பதிலடி!

மக்கள் திலகம் எம்ஜிஆர் வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையும் பார்த்து வியந்தவர்களின் நடிகரும் பத்திரிகையாளருமான சோ ராமசாமி அவர்களும் ஒருவர். எம்ஜிஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்தலில் எம்ஜிஆர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். அந்த சூழ்நிலையிலும் தன் மனதில் நியாயம் எனப் பட்டதை பட்டென சொல்பவர் தான் சோ ராமசாமி. மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்ஜிஆர் கொண்டு வந்த போது கிண்டல் செய்தாலும், சில ஆண்டுகளுக்கு பின் நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன் என்று மேடைகளில் கூறியுள்ளார்.

அடிமைப்பெண், ஒளிவிளக்கு, என் அண்ணன் உட்பட எம்ஜிஆர் உடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பை சென்றுள்ளார் சோ. அப்போது அங்கு ஒரு மூதாட்டி சோவை பார்த்து நான் உன்னை எம்ஜிஆர் படங்களில் பார்த்திருக்கிறேன். நீ எம்.ஜி.ஆரை சந்தித்தால் அவரை நான் நலம் விசாரித்ததாக கூறு என சொல்லிவிட்டு சென்றுள்ளார். அவர் யார் அவர் பெயர் முகவரி என எதையும் குறிப்பிடாமல் சென்றுள்ளார். ரசிகர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது வைத்திருந்த ஈர்ப்பை பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார் சோ ராமசாமி. எம்ஜிஆரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரம். கால்ஷீட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என பலர் சோவிடம் வந்து குறை கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் மற்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்காமல் சிறிது காலம் காத்திருந்து அவர்களின் அடுத்த படத்தை எம்ஜிஆர் வைத்து இயக்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

எம்ஜிஆர் வைத்து படம் இயக்குவது சற்று சிரமமாக இருந்தாலும், எம்ஜிஆர் ஹீரோவாக நடித்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைவதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் எம் ஜி ஆர் ஐ தேடி வந்தனர். மேலும் விளம்பரத்திற்காக மட்டுமே நடிகர் எம் ஜி ஆர் உதவிகளை செய்து வந்துள்ளார் என்ற கருத்தை சோ ராமசாமி முற்றிலும் மறுத்தார். விளம்பரம் நோக்கம் இல்லாமல் நடிகர் எம் ஜி ஆர் பலருக்கு உதவி செய்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். மேலும் திரைத்துறையில் தனக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டவருக்கு கூட நடிகர் எம் ஜி ஆர் பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜியை சிரமத்திற்கு உள்ளாக்கிய எம்ஜிஆர் பட இயக்குனர்!

பலர் கூறுவது உண்மையாக இருந்தாலும் நடிகர் எம் ஜி ஆர் விளம்பரத்திற்காக உதவி செய்பவராக இருந்தாலும் அப்படி எத்தனை பேர் விளம்பரத்திற்காகவாவது பிறருக்கு உதவ மனம் இருக்கிறது என்று கூறினார். எம்ஜிஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். சட்டாம் பிள்ளை வெங்கட்ராமன் என்பவர் பலம் பெறும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்த போது கையில் பணம் இல்லாத நிலையில் எம்ஜிஆர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டு விசாரித்து எம்ஜிஆரிடம் நிலைமையை கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த எம்ஜிஆர் அந்த அவசரத்திலும் கூட வீட்டில் உள்ளவர்களை அழைத்து வெங்கட்ராமனுக்கு தேவைப்படும் பணத்தை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எனக்கு தெரிந்து பலருக்கு எம்ஜிஆர் உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை என்று சோ மனம் திறந்து பாராட்டினார். மேலும் அரசியலிலும் சினிமாவிலும் ஜொலிக்கும் நமது மக்கள் திலகம் எம்ஜிஆரின் வள்ளல் குணத்தைக் கண்டு எத்தனையோ தடவை வியந்து இருக்கிறார் என கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...