6 வருஷத்துக்கு அப்புறம் ஆட்டத்துக்கு வரும் துருவ நட்சத்திரம்!.. புதிய டிரெய்லர் வெளியானது!..

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், விநாயகம், டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியானது.

சுமார் ஆறு வருஷத்துக்கு முன்னாடி துருவ நட்சத்திரம் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் பல தடைகளைத் தாண்டி கௌதம் மேனன் தயாரிப்பில் உருவான துருவ நட்சத்திரம் விரைவில் ரிலீசாக உள்ளது.

தொடர்ந்து அசத்தும் விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ஆக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார் சியான் விக்ரம். கடந்த ஆண்டு வெளியான முதல் பாகமும் இந்த ஆண்டு வெளியான இரண்டாம் பாகமும் அவரது நடிப்புக்காக ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வரும் விக்ரம் அடுத்த ஆண்டு அந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி ஒரு வழியாக திரைக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துருவ நட்சத்திரம் புதிய டிரெய்லர் ரிலீஸ்

படத்தை ரசிகர்களுக்கு புரோமொட் செய்யும் விதமாக புதிய ட்ரெய்லர் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் புதிதாக சிஎஸ்கே மேட்ச் பாணியில் கௌதம் மேனன் உருவாக்கியுள்ள ட்ரெய்லர் ரசிக்கும்படி வித்தியாசமாக உள்ளது.

மேலும் ஜெயிலர் படத்தில் வில்லனாக மிரட்டிய விநாயகம் முதலில் இந்த படத்தில் தான் மிரட்ட காத்திருந்தார். ஆனால் அதன் பின் உருவான ஜெயிலர் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்ட நிலையில், துருவ நட்சத்திரம் படத்தை வில்லன் விநாயகத்துக்காகவே தனி கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிது வர்மா ஹீரோயின்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளையடித்த ரித்து வர்மா சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு அவர்தான் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த நிலையில், அவரது காட்சிகள் நீக்கப்பட்டு தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், புதிதாக வெளியான டிரைலரில் கூட அவரைக் காட்டவில்லை.

சியான் விக்ரம் பேக் டு பேக் படங்களை கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார். ஜான் லுக்கில் செம ஸ்டைலான சீக்ரெட் ஏஜென்ட்டாக நடித்துள்ளார். பேஸ்மென்ட் எனும் 11 பேர் கொண்ட சிஎஸ்கே டீமில் லீடராக இருக்கும் ஜான் எதிரிகளை எப்படி வேட்டை ஆடப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews