களையிழந்த வைகையும் சித்ரா பவுர்ணமி நிலாச்சோறும்

தென்மாவட்டங்களில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமான திருநாளாகும். அழகர் வைகை ஆற்றில் இறங்கி முடித்த நிகழ்வை அன்றைய நாள் முழுவதும் கொண்டாடுவார்கள்.


முழுவதும் தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடுவார்கள். இரவு நேரத்தில் அழகிய நிலவொளியில் வைகை ஆற்று மணலில் குடும்பத்துடன் தங்கள் வீட்டில் சமைத்ததை உண்பார்கள்.

இதை ராஜ்கிரண் இயக்கிய அரண்மனைக்கிளி படத்தின் ஒரு காட்சியில் கூட இதை பிரதானப்படுத்தி இருப்பார். அழகிய வைகையாற்று மணலில் உட்கார்ந்து நிலாச்சோறு சாப்பிடுவது இந்த நாளில் நடந்தேறும் நிகழ்வாகும்.

புதிதாக திருமணம் முடிந்தவர்கள் தலை தீபாவளி கொண்டாடுவது போல் இந்த அரிய நிகழ்வை வருடம் ஒரு முறை கொண்டாடுவார்கள்.

உறவினர்கள் நண்பர்கள் என விடிய விடிய பேச்சும் ஆட்டம் பாட்டமும் களை கட்டும். அழகிய நிலவொளியில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து பேசுவதும் சாப்பிடுவது அலாதியான மிக சிறப்பான விசயம்தான்.

இது மதுரையில் இருந்து வைகை நதி பாயும் அனைத்து வழித்தடங்களிலும் குறிப்பாக மதுரைக்கு அடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கும் தேனி மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள வைகை ஆற்று மணலில் இது போல நிகழ்வு நடைபெறும்.

அரண்மனைக்கிளி படத்தில் இந்த நிகழ்வை இக்காட்சியை அடிப்படையாக கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் காலை வைக்கும் நல்ல நாளில் எட்டுப்பட்டி ஊருசனம் கட்டுச்சோறு கட்டி வரும் என்ற வரிகளுடன் வரும் பாடலை கவிஞர் வாலி எழுதி இருப்பார்.

பாரம்பரியமாக நடைபெற்ற கள்ளழகர் திருவிழாவும் இது போல ஒரு இனிமையான நிகழ்வும் இந்த வருடம் எதுவுமே நடைபெறாமல் களையிழந்து காட்சியளிப்பது மிகவும் வேதனையான விசயமாகும்.

Published by
Staff

Recent Posts