சித்தார்த்தின் சித்தா படம் எப்படி இருக்கு?.. ரசிகர்களை இப்படி அழ வச்சு அனுப்புறாரே!.. திரை விமர்சனம்!

சித்தா விமர்சனம்:

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான டக்கர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்த நிலையில், சித்தா திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தா படத்தை குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் பார்க்க வேண்டியது அவசியம் என்றே பதிவிட்டுள்ளார். பல இயக்குனர்களும் இந்த படத்தை தமிழ் சினிமாவின் மற்றும் ஒரு தரமான படைப்பு என பாராட்டி வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்னம், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ள நிலையில், சித்தார் படத்தின் முழுமையான விமர்சனம் அந்த படம் எதற்காக பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போமா..

சித்தார்த் தயாரிபு:

சித்தார்த்தின் ஈ டாக்கி தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவான சித்தார் திரைப்படத்தில் ஈஸ்வரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சித்தார்த். ஈஸ்வரன் தனது அண்ணன், அண்ணி மற்றும் அண்ணனின் மகள் சுந்தரியுடன் வாழ்ந்து வருகிறார். எதிர்பாராத விதமாக கதை நாயகன் ஈஸ்வரனின் அண்ணன் மரணித்து விட தனது அண்ணி மற்றும் அண்ணியின் மகளை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையை தலைமையில் ஏற்றுக் கொண்டு பொறுப்புள்ள மனிதனாக வாழ்கிறார் ஈஸ்வரன்.

ஆனால் அந்த சாதாரண எளிய அழகான குடும்பத்தில் யார் கண் பட்டது என்றே தெரியவில்லை அடுத்தடுத்து ஏகப்பட்ட பிரச்சினைகளை இயக்குனர் அடுக்கி படத்தைப் பார்க்கும் ரசிகர்களை பதைபதைப்பில் அழுத்தி விடுகிறார்.

சித்தப்பா எனும் சித்தா:

சேட்டை என செல்லமாக தனது அண்ணன் மகளை ஈஸ்வரன் அழைத்து வர, சித்தப்பாவை சித்தா என க்யூட்டாக அந்த பொண்ணு கூப்பிட்டு வர இருவருக்குமான உறவை அவ்வளவு அழகாக இயக்குனர் செதுக்கியுள்ளார்.

விக்ரம் வேதா இயக்குனர்களான புஷ்கர் காயத்தை தயாரிப்பில் வெளியான சுழல் வெப் சீரிஸில் அப்பா பார்த்திபன் இருக்கும்போதே சித்தப்பா மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது தங்கை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் படுவதாக கதையை எடுத்து சொந்த பந்தங்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் பயத்தை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கதையை சொந்த பந்தங்களை கேவலப்படுத்தாமல் இயக்குனர் அருண்குமார் கையாண்டு இருப்பது படம் பார்க்கும் மக்களை நெகிழச் செய்கிறது.

அழவைத்து அனுப்புகிறார்:

ஆனால் அந்த பிஞ்சு குழந்தைக்கு ஏற்படும் பாலியல் சீண்டல், மற்றும் அந்த குழந்தையை கடத்தப்படுவது போன்ற காட்சிகளால் மனதை ரணமாக்கும் இயக்குனர் அதில் சித்தார்த்தை சிக்க வைத்து உண்மையான குற்றவாளி யார்? தனது அண்ணன் மகளை காப்பாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதை திரைக்கதையில் ஆழமாகவும் அழுத்தமாகவும் வசனங்களை வலிமையாக வைத்து ஒரு சிறந்த படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் குமாரிடம் இருந்து மற்றுமொரு தரமான படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம். படமாகவும், சிறார் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான பாடமாகவும் இந்த சித்தா சிறப்பாக அமைந்துள்ளது.

சித்தா – சிந்தனை

ரேட்டிங் – 3.5/5.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...