நடுத்தெருவில் உயிரை விட்ட சின்னத்தம்பி பட நடிகர்… காரணம் இதானா?

சினிமாவில் நல்ல புகழைச் சேர்த்து, நிறைய பணம் சம்பாதித்து செட்டிலாகி பின்னர் வயோதிகத்தால் இறந்தவர்கள் ஏராளம். ஆனால் சினிமாவில் சம்பாதித்ததை குடித்து அழித்து மருத்துவ சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் நடுவீதியில் விழுந்து உயிரைவிட்ட ஒரு நடிகர் யாரென்றால் அது உதய் பிரகாஷ் தான்.

சின்னத்தம்பி படம் பார்த்தவர்களுக்கு இவர் நன்கு பரிச்சயம். குஷ்பூவின் அண்ணனாக வரும் உதய் பிரகாஷ் நெகடிவ் ரோல்களில் நடித்துப் புகழ்பெற்றார். ஆனால் விதி விளையாடியது. தனக்கு வந்த வாய்ப்புகளை அவர் சரியாகப் பயன்படுத்தாமல் குடிக்கு அடிமையானார்.

ஊட்டியில் பிறந்த இவரின் இயற்பெயர் மணிகண்டன். இவர் ஒரு சிறந்த கால்பந்து வீரரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி நடித்து வெளிவந்த தெலுங்கு படமான வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவங்க வாரிசெல்லாம் பிரபல டாக்டர்களா? ஜெமினி முதல் ஷங்கர் வரை மருத்துவர்களான திரை வாரிசுகள்

சின்னத்தம்பி, வருஷம் 16, அன்புச்சங்கிலி, இதய வாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். பின் அதிக பட வாய்ப்புகள் வந்த உடன் இவர் அதிகமாக குடிக்க தொடங்கினார். குடிப்பழக்கத்தினால் இவர் சூட்டிங் போகாமல் வீட்டிலேயே விழுந்து கிடப்பார். கடைசியாக நடிகர் சரத்குமார் அவர்கள் தனது திவான் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். ஆனால், அதற்கு பிறகும் இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் இவருக்கு நிறைய மன கஷ்டமும், பண கஷ்டமும் ஏற்பட்டது பின் கடன் தொல்லைகள் அதிகம் ஆனது. கடன் அதிகமானதால் சென்னையை விட்டு வெளியேறி விட்டார். பின் இவர் கிராமத்தில் ஒரு குடிசையில் ஒரு துறவியின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். குடித்து குடித்து இவருடைய கல்லீரல் கெட்டுப் போய் விட்டது.

பின் ஆஸ்துமா நோயும் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவமனையில் இருந்து கிளம்பி நடிகர் சங்கம் அருகில் உள்ள ரோட்டில் நடிகர் உதய் பிரகாஷ் விழுந்து கிடந்து இறந்தார். சினிமாவில் சேர்த்த புகழையும், பணத்தையும் குடியால் கெட்டு சீரழிந்து உயிர் துறந்த பல நடிகர்களில் உதய் பிரகாஷும் ஒருவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews