செட்டிநாடு ஸ்பெஷல் வத்தல்குழம்பு பொடி…. வீட்டுலே 5 நிமிடத்தில் ரெடி பண்ணலாம்!

சுவையான வத்தல் குழம்பு செய்யணும்னா முதலில் அதற்க்கு பொடி தயார் செய்ய வேண்டும், அந்த பொடியை பொறுத்து தான் வத்த குழம்பின் சுவை அமையும், வத்தல் குழம்பு , சூடான சாதம் , சுட்ட அப்பளம் பொருத்தமான சுவையாக விரும்பி சாப்பிடலாம்.

பொடியில் சேர்க்கும் பருப்பு வகைகல் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது, மிளகு ஜீரண சக்தியை தூண்டும்.

நாம் பொடியை முதலில் தயாரித்து வைத்துக்கொண்டால் குழம்பு சில நிமிடங்களில் தயாரித்து விடலாம்.

பொடி தயாரிக்க :

கடலை பருப்பு -1 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
வர மல்லி -1 1/2 தேக்கரண்டி
மிளகாய் -10
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
வெந்தயம்-1/2 தேக்கரண்டி
பெருங்காயம்-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

இவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

குழம்பு செய்யும் முறை:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
சுண்ட வத்தல் -1 மேஜைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 2
சின்ன வெங்காயம் -10
வெல்லம் -1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு வெந்தையம் போட்டு தாளிக்கவும், அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் , வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் 3 தக்காளியை அரைத்து சேர்த்து கொள்ளவும்.

அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் அரைத்துவைத்துள்ள குழம்பு பொடி 3 தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் சில நிமிடம் வறுக்கவும்,

பின்பு கறிவேப்பிலை சேர்த்து புளிக்கரைசல் நீரை ஊற்றவும், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அனந்த நேரத்தில் உப்பு சேர்த்து கொள்ளவும்.

ரசிகர்களின் தொல்லையால் அபராதம் கட்டிய விஜய்! அப்படி என்ன நடந்திருக்கும்?

சில நிமிடங்கள் கழித்து வெள்ளம் சேர்த்து தீயை மிதமாக வைத்து கொதிக்க விடவும்.

எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை இந்த குழம்பை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இப்போது சுவையான வத்த குழம்பு தயார் ,இது இரண்டு முதல் 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews