படிக்கும் காலத்தில் கையில் பணம் இல்லாத தவித்த ரஜினி.. நண்பர்களுடன் சாப்பிடப் போன போது ஏற்பட்ட அனுபவம்!

இன்று நாம் கொண்டாடும் திரையுலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை அவருக்கு ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை. அதற்குப் பின்னால் இருந்த அசுர உழைப்பு தான் அவரை இன்று இந்த அந்தஸ்தில் உட்கார வைத்திருக்கிறது. திரையுலகின் உச்சியிலும், இந்தியாவின் முக்கிய பிரபலங்களில் ஒன்றாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் திரைப்படக் கல்லூரியில் பயின்ற காலங்களில் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

சிவாஜிராவ் என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் மேற்கொண்ட நடத்துனர் பணியை உதறி சினிமாவின் மீது கொண்ட மோகம் காரணமாக திரைப்படக் கல்லூரியில் சினிமா கலை பயின்று பின்னர் பல முயற்சிகள் செய்தபின் அபூர்வராகங்கள் படத்தில் கே.பாலச்சந்தர் இவரை நடிகராக முதன்முதலில் அறிமுகம் செய்தார்.

ஆனால் ரஜினிகாந்த் அதற்கு முன் திரைப்படக் கல்லூரியில் பயின்று வந்த காலகட்டங்களில் பீஸ் கட்டவே சிரமப்பட்டிருக்கிறார். அப்போது அவர் தங்கியிருந்தது ராயப்பேட்டையில் நண்பர்களுடன் ஒரு சிறு வீட்டில். அங்கும் முறையான சாப்பாடு கிடைக்காது.

எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு

எனினும் அவ்வப்போது கிடைக்கும் பணத்தினை வைத்து அப்போது அப்பகுதியில் பிரபலமாக இருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சென்று உணவருந்துவாராம் ரஜினி. அந்த ஹோட்டலின் முதலாளியான சர்தர் நாராயணராவ் ரஜினி மற்றும் அவர் நண்பர்களைப் பார்த்து, “வந்துட்டடாங்கடா வருங்கால ஸ்டார்ஸ்“ என்று தமாஷாகக் கூறுவாராம். வயதில் பெரியவரான அவரை அப்பா என்றுதான் ரஜினி அழைப்பாராம்.

ஒருமுறை தனது நண்பர் விட்டலுடன் உட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார் ரஜினி. அப்போது அங்கிருந்த சர்தர் நாராயணராவிடம் நான் எனது நண்பனோடு வந்திருக்கிறேன். என்னிடம் குறைந்த பணமே உள்ளது. அவருக்கு வேண்டியதைப் பரிமாறுங்கள்.  என்னைக் கேட்டா பசிக்கலன்னு நான் சொல்லி விடுகிறேன் என்றிருக்கிறார் ரஜினி.

இதனைக் கேட்ட சர்தர் நாராயணராவ் ரஜினியைப் பார்த்து, “போடா அசட்டுப் பயலே.. ரெண்டு பேரும் என்னவேணும்னாலும் வாங்கிச் சாப்பிடுங்க.. பணத்தைப் பற்றிக் கவலைப் படாதே“ என்று கூறி அவர்களை அமர வைத்து உணவருந்த வைத்திருக்கிறார். பின்னர் ரஜினியும், விட்டலும் நன்றாக உணவருந்திய பிறகு கடைசி வரை பில்லே வரவில்லையாம். ரஜினி கேட்டதற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம் உட்லேண்ட்ஸ் முதலாளி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews