சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி: மீண்டும் வெற்றி பெற்ற ராஜஸ்தான்.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 77 ரன்கள் அடித்தார். இதனை

rr won1அடுத்து 203 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கமே மிகவும் சுமாராக இருந்தது. முதல் 6 ஓவர்களில் அந்த அணி பெரும் 42 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு வித்திட்டதாக கருதப்பட்டது.

இருப்பினும் சிவம் துபே, ஜடேஜா, மொயின் அலி உள்ளிட்ட பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த போது ராஜஸ்தான் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதும் இன்றைய தோல்வியால் சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.