சக்தியால் வீட்டில் ஏற்பட்டக் குழப்பம்… சமாளிக்க திணறும் வேலன்… சக்திவேல் தொடரின் இன்றைய எபிசோட் …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோட் கலகலப்பாக இருந்தது. அசைவ சாப்பாட்டிற்காக மீனாள் தனது அப்பாவிற்கு போன் செய்து வரவைத்தாள். வேலன் சக்தியை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறான். பின்னர் சக்தியும் தேனுவும் மாங்காய் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்திருந்தது.

இன்றைய எபிசோடில் சக்தி தேனுவிடம் மாமா இப்போ எப்படி இருக்கிறார், மாமாவிற்கு உங்களை பிடிக்காதுன்னு முன்னாடியே தெரியுமா என்று கேட்கிறாள். அதற்கு தேனு, பிசினஸ் டீலிங்காக எங்க கல்யாணம் நடந்துச்சு. அவருக்கு என்ன பிடிக்குமா எனக்கு அவரை பிடிச்சிருக்கான்னு யாருமே கேக்கல. ஆனால் நீ ரொம்ப கொடுத்து வச்சவ சக்தி வேலு தம்பி அத்தனை பேரையும் எதிர்த்து உன்ன கல்யாணம் பண்ணிகிட்டார். என்ன பாரு அவருக்கு என்னை பிடிக்கலன்னு தெரிஞ்சுக்கவே இத்தனை வருஷம் ஆகிருச்சு என்று கூறுகிறாள்.

அங்கிருந்து ஜோதி ஒரு கூடை பாத்திரத்தை சக்தியை கழுவ சொல்வதற்கு எடுத்து வருகிறாள். அதைப் பார்த்த தேனு பயந்து வீட்டிற்குள் சென்று விடுகிறாள். ஜோதி வந்து சும்மா என்ன அக்கா அக்கானு பேசிட்டு இருக்க ஒழுங்கா இந்த பாத்திரத்தையெல்லாம் கழுவு. எல்லாரையும் கைக்குள் போட்டுட்டு என் இடத்திற்கு வரணும்னு மட்டும் நினைக்காத, அப்புறம் இந்த ஜோதி யாருனு பரப்ப என்று கூறிவிட்டு செல்கிறாள்.

சக்தி வேலையை ஆரம்பிக்கிறாள். வெறும் வயிற்றில் மாங்காய் சாப்பிட்டதால் அவளுக்கு வாந்தி வருகிறது. அப்போது அங்கு வந்த சிக்கல் சிவபதி சக்தி வாந்தி எடுப்பதை பார்க்கிறார். பின்னர் அனைவரையும் கூப்பிட்டு சக்தி வாந்தி எடுக்கிறாள் என் வீட்டுக்கு இன்னொரு வாரிசு வரப்போகுது நான் இப்போ இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறேன். என்னடா வேலா நான் சொல்வது உண்மை தான என்று கேட்டதற்கு வேலு ஒன்னும் சொல்ல முடியாமல் திணறுகிறான். எல்லாரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

ஒன்றும் புரியாமல் இருந்த சக்தி வேலு ரூமிற்கு வந்ததும் என்னதான் நடக்குது என்று கேட்கிறாள். நீ மாங்காய் சாப்பிட்டதும் வாந்தி எடுத்ததையும் வைத்து நீ முழுகாம இருக்கேனு அப்பா நினைச்சிட்டு சந்தோஷத்துல இருக்கார். நான் என்ன செய்றதுன்னு தெரியாம அப்பா சந்தோஷத்தை கெடுக்க வேணாம் அப்டினு தலையை ஆட்டிட்டு வந்துட்டேன் என்று கூறுகிறான். அதற்கு சக்தி இந்த விஷயத்துல ஏன் வேலா பொய் சொன்ன கர்ப்பத்தை வைத்து எவ்ளோ நாள் சமாளிக்க முடியும் இது மறைக்கக் கூடிய விஷயமா என்று திட்டுகிறாள். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...