பேய்க்கும் பேய்க்கும் சண்டை!.. வெறித்தனமாக வெளியான சந்திரமுகி 2 டிரெய்லர்!..

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், மாளவிகா, வினித், சோனு சூட், விஜயகுமார் மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக சூப்பர் ஸ்டாருக்கு அமைந்தது.

சந்திரமுகி 2 டிரெய்லர் ரிலீஸ்:

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவை தவிர வேறு யாரும் நடிக்காமல் புதிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

ரஜினியின் சிஷ்யனாக வலம் வரும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படங்களில் இருந்து விலகி சந்திரமுகி 2 படத்தில் வேட்டையன் ஆக வெறி கொண்டு நடித்துள்ளார்.

சந்திரமுகியாக கங்கனா ரனாவத்:

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தப் படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் வரும் சந்திரமுகியாகவே நடித்துள்ளார். கண்களை உருட்டி மிரட்டும் காட்சிகளில் கனகச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

புதிய டிரைலரில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மற்றும் பேய்க்கும் பேய்க்கும் சண்டை என காஞ்சனா படத்தில் வருவதுபோல வேட்டையனுக்கும் சந்திரமுகிக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை கண்டிப்பாக மிரட்டி விடும் எனத் தெரிகிறது.

ஆர்ஆர்ஆர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற கீரவாணியின் பின்னணி இசையில் படம் மேலும் பிரம்மிக்க வைக்கிறது.

சந்திரமுகி கதை: 

கான்ட்ராக்டர் செந்தில் தனது மனைவி கங்காவிற்காக வேட்டைய ராஜா அரண்மனையை விலைக்கு வாங்குவதும் அந்த அரண்மனையில் தங்குவதன் மூலம் அவரது மனைவி கங்கா சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொள்வதும், மனோதத்துவ நிபுணரான சரவணன் சந்திரமுகியா பாதிக்கப்பட்டது யார்? வீட்டு வேலைக்காரி துர்காவை சந்திரமுகியாக ஜோடிப்பது யார் உள்ளிட்ட கேள்விகளை கண்டறியும் காமெடி கலந்த பேய் கலந்த மனோதத்துவ படமாக சந்திரமுகி திரைப்படம் அமைந்திருக்கும்.

மிரட்டுமா சந்திரமுகி 2?:

அந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே பெரிய நடிகர்கள் என்பதால் படம் சுமார் மூன்று ஆண்டுகள் தியேட்டரில் ஓடின. ஆனால் சமீபத்தில் வந்த ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமே 30வது நாளில் வெறும் 9 பேர் மட்டுமே உள்ள நிலையில் படத்தை போட முடியாது என நிர்வாகம் கூறிய அவலநிலை இந்த காலத்தில் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ், கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு இதுவரை பெரிய அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வராத சூழ்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய டிரைலர் ரசிகர்களை கண்டிப்பாக தியேட்டர் பக்கம் அழைத்து வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை எனக் கூறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.