இறைவன், சித்தாவை முதல் வாரத்தில் முந்திய சந்திரமுகி 2..! இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா..?

கடந்த வாரம் தொடர்ந்து 5 நாள் விடுமுறையை டார்கெட் செய்து தமிழ் சினிமாவின் மொத்தம் மூன்று பெரிய படங்கள் வெளியாகின. நடிகர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த இறைவன் திரைப்படம் சைக்கோ திரில்லர் படமாக வெளியானது. ஆனால் இறைவன் திரைப்படம் திரைக்கதை மூலமாக ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

இறைவன் பட வசூல்

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அகமது இயக்கத்தில் சைக்கோ திரில்லர் படமாக வெளியான இறைவன் திரைப்படம் ஐந்து நாட்களில் ஒட்டுமொத்தமாக 10 முதல் 12 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபீஸில் அதே அளவுக்கான வசூலை இயற்றியதால் என்று பார்த்தால் இல்லை என்கிற பதில்தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சித்தார்த்தின் சித்தா வசூல்

நல்ல திரைக்கதை நல்ல திரைப்படம் என பாராட்டப் பெற்றாலும் நடிகர் சித்தார்த்தின் படத்தை பார்க்க பொதுமக்கள் கொஞ்சம் கூட ஆர்வத்தையே செலுத்தவில்லை என்பதுதான் அந்த படம் கடந்த ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் மூலம் தெரிய வருகிறது.

பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் சித்தார்த் தொடர்ந்து சொதப்பல் படங்களை கொடுத்து வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக தியேட்டர் ரசிகர்களை இழந்துவிட்டார் என்பதே தெரிகிறது. கடந்த 5 நாட்களில் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் வெறும் 3.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கணித்துள்ளனர்.

வசூல் வேட்டை நடத்திய சந்திரமுகி 2

ரஜினி நடித்த சந்திரமுகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் சுமாராக இருந்தாலும் தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களுக்கு கொஞ்சம் காமெடியும் கொஞ்சம் பேய் கதையும் கொடுத்த ரீதியில் அந்த படத்திற்கு செய்யப்பட்ட பெரிய அளவிலான புரமோஷன்கள் காரணமாக கடந்த வாரத்தில் வெளியான மூன்று படங்களில் அதிகபட்ச வசூல் வேட்டையை சந்திரமுகி 2 திரைப்படம் பெற்றுள்ளது.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் கடந்த ஐந்து நாட்களில் ஒட்டுமொத்தமாக 30 கோடி ரூபாய் வரை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தால் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.