Category: தமிழகம்

vijay karur

இன்றைய கரூர் கூட்டத்தில் ஒன்றை கவனித்தீர்களா? விஜய் பேச்சில் அதிமுகவை அவர் கண்டு கொள்ளவே இல்லை.. இன்னும் அவர் தவெக – திமுக என்ற போட்டியையே மக்கள் மனதில் விதைக்கிறார்.. அதிமுக ஒரு கட்சியே இல்லை என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்.. இவ்வளவுக்கும் இடைத்தேர்தல் வரும் தொகுதிகள் எல்லாமே அதிமுக வென்ற தொகுதிகள்.. இருப்பினும் தீர்ந்து போன கட்சி என அதிமுகவை விளாசுகிறார்.. முழுசா அரசியல்வாதியாகிவிட்ட விஜய்யை பாருங்க…

ஜூலை 10, 2026, 16:30
julie gen z

ஜூலி எல்லாம் வந்து தான் திமுக வளரணும்ன்னு இருந்தா அது எவ்வளவு பெரிய கேவலம்.. பிக்பாஸ் ஜூலியை பார்த்தாலே தமிழ்நாட்டை சேர்ந்த முக்காவாசி பேருக்கு பிடிக்காதுன்னு கூட தெரியாம இருக்குது திமுக ஜென் சி கூட்டம்.. அண்ணாவும் கருணாநிதியும் வளர்த்த கட்சி இன்னிக்கு ஜூலியை நம்பி இருக்குதா?

ஜூலை 9, 2026, 21:07
vijay govt2

6 அமைச்சர்களை மாற்ற முதல்வர் விஜய் முடிவா? ரீல்ஸ், மீடியாவிடம் உளறுவது, பழைய குற்றச்சாட்டுக்களால் அரசுக்கு கெட்ட பெயர் உள்பட பல காரணங்கள்.. அமைச்சர்களாகும் எளிய எம்.எல்.ஏக்கள்.. தப்பு செய்தால் உடனே பதவி போய்விடும்.. ஜெயலலிதா பாணியில் அமைச்சர்களை நடத்த முதல்வர் முடிவா? சாட்டையை கையில் எடுக்கும் விஜய்..

ஜூலை 9, 2026, 13:50
stalin udhayanidhi

விஜயகாந்தை பாஜகவின் ‘பி’ டீம் என திமுக சொன்னது.. இன்றைக்கு விஜயகாந்தின் தேமுதிக, திமுக கூட்டணியில்.. கமல் பாஜகவின் ‘பி’ டீம் என திமுக சொன்னது.. இன்றைக்கு கமலின் மநீம திமுக கூட்டணியில்.. அப்ப உண்மையான பி டீம் திமுக தானே.. அப்படியே விஜய்யையும் பாஜகவின் ‘பி’ டீம் என சொல்ல முயற்சி.. ஆனால் விஜய்யும் உங்களுடன் வரமாட்டார்.. அவருடைய கட்சியில் ஒரு எம்.எல்.ஏ கூட உஙக்ளுடன் வரமாட்டார்கள்.. விஜய் தனித்தே 108 இடங்களில் ஜெயித்தார்.. இப்போது வலுவான கூட்டணியும் இருக்கிறது.. எனவே விஜய்யை தோற்கடிக்க ஸ்டாலினாலும் முடியாது.. உதயநிதியாலும் முடியாது..

ஜூலை 8, 2026, 15:04
gen z anbanandham

சாமி முன்னாடி மட்டும் தான் சாந்தமா இருப்போம், சாக்கடை முன்னாடி இல்லை.. தவெக ஆதரவு ஜென் சி யாராவது ஒருத்தர் ஸ்டாலின் குடும்பத்தை பத்தியோ, உதயநிதி குடும்பத்தை பத்தியோ தப்பா பேசி பார்த்ததுண்டா? நீங்க திமுக ஜென் சி-ன்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? முதல்வரையும், அவரோட குடும்பத்தையும் மட்டமா பேசிட்டு ஜாலியா வெளியே இருக்கலாம்ன்னு பார்த்தியா? வச்சாரு பாரு ஆப்பு ஜட்ஜ்.. இப்போ அன்பானந்தம் சரண்டர் ஆகிட்டாராம்.. இனி வாழ்க்கை முழுவதும் கோர்ட் படியேறனும்.. திமுக உங்களுக்கு ஒரு உதவியும் செய்யாது.. போய் புள்ள குட்டியை படிக்க வைக்கிற வேலையை பாருங்கப்பா…

ஜூலை 7, 2026, 18:32
vijay vs udhayanidhi 1

40 நாள், 50 நாள் ஊர் ஊரா சுத்தியும் ‘எதிரி யாருன்னு தெரியாம தோத்துட்டோம்’னு புலம்புறீங்களே உதயநிதி சார்… நாங்க ஒன்னும் இருட்டுல மறைஞ்சு நின்னு யுத்தம் பண்ணல! மக்களோட வெளிச்சமா, நேர்மையான பாதையிலதான் வந்தோம். உங்களோட ‘உளவுத்துறை’ உங்க கண்ணை மறைச்சிருக்கலாம், ஆனா மக்களோட ‘தெளிவுத்துறை’ இந்த விஜய்யை சிம்மாசனத்துல உட்கார வச்சிருச்சு!

ஜூலை 7, 2026, 10:40
dmk supporters

திமுகவுக்கு சூன்யம் வைப்பதே திமுகவின் ஆதரவாளர்கள் தான்.. இந்த டிஜிட்டல் உலகில் ஒரே ஒரு வன்மமான பேச்சு ஒரு லட்சம் ஓட்டை சோலியை முடிச்சிடும்.. எதிர் தரப்பை கேலியும் கிண்டலும் செய்றோம்ன்னு நினைச்சுகிட்டு இவங்களுக்கு இவங்களே குழி வெட்டிக்கிறாங்க.. திமுக ஆதரவாளர்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்படும் ட்வீட்டுக்கள், யூடியூப் பேட்டியை நிறுத்திவிட்டாலே போதும், அந்த கட்சி தேறிவிடும்.. ஆனால் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே…

ஜூலை 6, 2026, 22:30
dmk genz

திமுகவின் ஜென்-சி அணியில இருந்தா நீ என்ன பெரிய ஆளா? கையில ஆண்ட்ராய்டு போன் இருக்கு, டைப் பண்ண விரல் இருக்குன்றதுக்காக சி.எம் விஜய் குடும்பத்தை பத்தியும், பெண்கள் பத்தியும் இன்ஸ்டாகிராம்ல என்ன வேணா பேசுவியா? சோசியல் மீடியா என்ன உனக்கு எழுதி வச்ச சொத்தா… வாய்க்கு வந்தபடி வாந்தி எடுக்க? இதோ ஹைகோர்ட்டே உன் முகத்துல கறாரா சொல்லிருச்சு… நீ போட்ட போஸ்ட் இந்த சமூகத்தோட மனசாட்சியை உலுக்கியிருக்குன்னு! இனி உன் பழைய ஆட்டமெல்லாம் இங்க செல்லாது!

ஜூலை 6, 2026, 15:37
rahul vijay

இந்தியா கூட்டணியே எனக்கு தேவையில்லை.. சேர்த்தா சேர்த்துக்கோங்க, சேர்க்காட்டி போங்க.. என்னால தனிச்சு நின்னோ, அல்லது இப்ப இருக்குற கூட்டணியை வச்சோ 40க்கு 40 ஜெயிக்க முடியும்.. 2034க்குள்ள தென்னிந்தியா ஃபுல்லா என்னால தனிச்சு நின்னு 100க்கும் அதிகமான சீட் ஜெயிக்க முடியும்.. என்னோட வாக்கு வங்கி வேனும்ன்னா, இந்தியா கூட்டணியில சேர்த்துக்கொங்ல, இல்லையா? ஒன்னும் பிரச்சனையில்லை.. தைரியமாக இருக்கும் முதலமைச்சர் விஜய்…

ஜூலை 5, 2026, 21:30
mgr jayalalitha vijay

அன்னைக்கு ஜெயலலிதா அம்மா திமுக மேல ஆக்ஷன் எடுத்தப்போ பின்னாடி ஒரு தனிப்பட்ட காயம் இருந்துச்சு. ஆனா இந்த தளபதி எடுக்கப்போற ஆக்ஷன் பின்னாடி எந்த விரோதமும் இருக்காது, ஆனா விஜய்யோட ஊழலுக்கு எதிரான வேகம் அதைவிட பத்து மடங்கு அதிகமா இருக்கும்! பகைக்காக சண்டை போடுற காலம் முடிஞ்சு போச்சு… இனிமே நீதிக்காக மட்டும்தான் இங்க யுத்தம் நடக்கும்! ஒருத்தர் மேல கூட பர்சனல் விரோதம் காட்ட மாட்டேன், ஆனா ஜனங்க காசை தொட்ட ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்

ஜூலை 5, 2026, 14:14