மாரி செல்வராஜ்க்கு பேக்ஃபயர்? மாமன்னன் ரத்னவேல் கேரக்டர் கொண்டாடப்படுவது ஏன்?

ராஜ ராஜ சோழனுக்கு பிறகு எல்லா ஜாதியினரும் உரிமை கொண்டாடுற ஒரே ஆளு ரத்தினவேல் தான்.. ஆம் ரத்னவேலை இங்கு பல சாதியவாதிகள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கொண்டாடுவது ஏன் என்ற கேள்விக்கான பதில் நிச்சயம் நெருடலானவை.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரின் முன்னால் உட்கார முடியாத எம்எல்ஏவாக வடிவேலு நடித்திருப்பார். அவர் எப்படி உட்கார்ந்தார். அவருக்கு எதிராக ஆதிக்க சாதியைச் சேர்ந்த பகத் பாசில் எப்படி செயல்பட்டார் என்பதே கதையாக இருக்கும்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

கடைசி வரை விறுவிறுப்பாக செல்லும் இப்படத்தின் கதை என்பது ஆதிக்க சாதியை சேர்ந்த ரத்னவேல் எப்படி மாமன்னிடம் தோற்றார் என்பதுதான். இந்த படத்தில் ரத்னவேல் கேரக்டர் பெரிய அளவில் திடீரென கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணங்கள் மிகவும் அபாயகரமானது. அதில ஆதிக்க சாதியாக காட்டப்படும் ரத்னவேல் எந்த சாதி என்று எங்குமே குறிப்பிடப்பட்டிருக்காது. அதுதான் சாதியவாதிகளுக்கு கொண்டாட வசதியாக போய்விட்டது.

கமல்ஹாசன் நடித்த தேவர் மகனை பார்த்து மாமன்னன் படம் எடுத்ததாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார். அதில் வரும் பாட்டும், கமலின் கேரக்டரும் தன்னை பாதித்தாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார். மக்கள் அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளாமல் கெட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டதாகவும், அதனால் தானே பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் பார்த்து பார்த்து சாதியவாதிகளின் ஆணவத்தை தோல் உரிக்க எடுத்த படத்தில், துரதிஷ்டவசமாக சாதியவாதிகள் தங்களுக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆம்.. சாதியவாதிகள் ரத்னவேல் கேரக்டரை தங்கள் சாதியினை தூக்கி பிடிக்கும் பாடல்களை போட்டு ரீமேக்ஸ் செய்து கொண்டாடி வீடியோ வெளியிடுகிறார்கள். இதன் மூலம் தெரியவருவது ஒன்று தான்.. சாதியவாதிகள் தங்களுக்கு என்ன தேவையோ அதை எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்வார்கள்.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

ஆதிக்க சாதி வெறி உள்ளவராக பகத் பாசில் நடிப்பில் பிளந்து கட்டியிருப்பார். அவரது குணநலம் அக்மார்க் சாதிய வாதிகளின் குணமாக இருக்கும். என்ன மனசன் சார் இவரு என்று படத்தை பார்ப்பவர்களை கூற வைத்துள்ளார் பகத் பாசில். ஒடிடியில் வெளியாகி உள்ள சில நாட்களில் தான் மாமன்னன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிப்பாடலை போட்டு தூக்கி பிடிக்கிறார்கள். மேட்டுக்குடியில் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது என்று ஒருவரும், சோலக் கூலு கேட்டு வந்த சோறு போட்டு விசிறி விடும் என்று இன்னொரு குரூப்பினரும் வீடியோ போடுகிறார்கள். சாதிப்பாடல்கள் எத்தனை இருக்கிறது என்பது ரத்னவேல் வெர்சனை கேட்டால் உங்களுக்கு தெரியும்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

மாமன்னன்கள் கொண்டாடப்பட வேண்டிய நிலையில், அதில் நடித்த ரத்னவேல் கொண்டாடப்படுவது உண்மையில் கசப்பானது மட்டுமல்ல.. ஆபத்தான போக்கு.. சாதியவாதிகளை பொறுத்தவரை கொண்டாட வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு தேவையானது வேண்டும். அதில் எதில் இருந்தாலும் கண்டிப்பாக எடுத்துக் கொள்வார்கள் என்பது மாரி செல்வராஜ்க்கு இன்று புரிந்திருக்கும். அன்று தேவர் மகன் படத்தை பார்த்து தாக்கம் இருந்ததாக கூறியவருக்கும் இன்று நிச்சயம் மாமன்னன் படமும் பாடமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...