தனுஷ்- சிவ்ராஜ் கூட்டணியில் உருவான ‘கொரனாறு‘ பாடல் : புழுதி பறக்கும் கேப்டன் மில்லர் 3-வது சிங்கிள்

வாத்தி படத்திற்குப் பிறகு தனுஷ்-ன் அடுத்த படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் இருந்த அவரது ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் தித்திக்கும் கரும்பாக பொங்கல் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தே மிரண்டு போன தமிழ் சினிமா படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மூக்கின் மேல் விரல் வைக்கிறது.

ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் சிங்கிளான மில்லர் மில்லர் கேப்டன் மில்லர் பாடல் இணையதளத்தை இன்னும் சூடாக்கிக் கொண்டிருக்க அடுத்தடுத்த சிங்கிள்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்து.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர்  படத்தை இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினிக்கு தங்கையாக சுஹாசினி நடித்த படம்.. அந்த பாலிவுட் நடிகை நடிச்ச ஒரே தமிழ் படமும் இதுதான்..

சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது சிங்கிளான கொரனாறு பாடல் நேற்று வெளியாகி இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவ்ராஜ்குமார், தனுஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடனமாடும் இப்பாடலை உமா பாரதி இயற்ற பாபா பாஸ்கர் நடனம் அமைத்துள்ளார்.

கேட்டாலே வைப் ஏற்றும் இந்தப் படத்தின் பாடல்களை ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கொரனாறு பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். இவருடன் சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். உடுக்கை, தவில் உள்ளிட்ட வாத்தியங்கள் வழியே ஃபாஸ் பீட் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது.

‘கொள்ளையாடும் கூட்டத்த, கொல்லும் பகை கூட்டத்த குடல உருவி மாலைய போட்டு காவ காத்து நின்னாரு’ போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. ஏற்கனவே தனுஷ்-ஜி.வி.பி கூட்டணியில் அமைந்த பல்வேறு பாடல்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன. இந்நிலையில் இப்படத்திலும் அந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேப்டன் மில்லர் பொங்கல் ரேஸில் கேப்டனாக ஜொலிப்பாரா அல்லது மனைவியின் இயக்கத்தில் வெளியாகும் லால் சலாமுக்கு சல்யூட் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.