சொதப்பிய இயக்குநர்.. சோடைபோன கேப்டன் படம்.. அதன்பின் நடந்த மேஜிக்கால் சூப்பர் டூப்பர் ஹிட்டான வரலாறு..

கேப்டன் விஜயகாந்த் தனது நண்பரும், சினிமாவின் குருநாதருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். பல 100 நாள் படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் உதவியாளர் செந்தில்நாதன் விஜயகாந்தை வைத்து முதன் முதலாக படம் இயக்கத் திட்டமிடுகிறார். இதற்கான கதையை லியாத் அலிகான் எழுத படம் தயாரானது. கேப்டன் விஜயகாந்தும், அவரது நண்பருமான இப்ராஹிம் ராவுத்தரும் இணைந்து இப்படத்தினை தயாரித்தனர்.

இவ்வாறு இவர்கள் கூட்டணியில் வந்து மாபெரும் வெற்றி பெற்று, கேப்டன் விஜயகாந்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற படம் தான் 1988-ல் வெளியான பூந்தோட்ட காவல்காரன். ஆனால் இந்தத் திரைப்படத்தினை முதன் முதலில் எடுத்து முடித்து விநியோகஸ்தர்களிடம் காட்டிய போது யாரும் வாங்கக் கூட ஆளில்லை என்பது தான் உண்மை. ஆனால் திருச்சி ஏரியா விநியோகஸ்தர் அடைக்கலராஜ் என்பவர் மட்டும் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தார்.

இந்நிலையில் படம் இளையராஜாவின் பின்னணிக்காக செல்கிறது. அங்கும் இளைராஜாவுடன் ஓர் இயக்குநரும் இணைந்து படத்தைப் பார்க்க அவருக்கு திருப்தி இல்லாமல் போயிருக்கிறது. பின்னர் அந்த இயக்குநர் அடைக்கலராஜிடம் படம் சொதப்பல் நன்றாக இல்லை. கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்குங்கள் என்று கூற, அவரும் ராவுத்தரிடமிருந்து திரும்ப வாங்கியிருக்கிறார்.

இணையத்தில் வைரலாகும் ஜோதிகாவின் எவரெஸ்ட் டிரக்கிங்.. எந்த ஹீரோயினும் செய்யாத சாதனை என பாராட்டு

இப்படி அடுத்தடுத்துவந்த நெகடிவ் விமர்சனங்களால் படத்தினை இத்தோடு நிறுத்தி விடலாம் என்று கூற, விஜயகாந்தும் ஏண்டா கண்ட ஆட்கள் சொல்வதைக் கேட்டு இப்படி செய்கிறீர்கள் என்று கோபத்துடன் அத்துடன் படத்தினை மூட்டை கட்டி வைத்தனர். இயக்குநர் செந்தில் நாதனும் மீண்டும் தன் குருநாதரிடமே சேர்ந்து கொள்கிறார்.

இப்படி அடுத்தடுத்து சோதனைகளைச் சந்தித்த பூந்தோட்ட காவல்காரன் படத்திற்கு வெளிச்சம் பிறந்தது யாரால் தெரியுமா? இசைஞானி இளையராஜாவால் தான். இப்படி படம் நிறுத்தப் போவதை அறிந்த இளையராஜா மீண்டும் படத்தினை கொண்டு வரச் சொல்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னனி இசையில் உழைப்பைக் கொட்டுகறார். மேலும் பாடல்களிலும் மெனக்கெட எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் பர்ஸ்ட் காபி போட்டுப் பார்க்க இது வேண்டாம் என்று கூறிய படமா என்று அனைவரும் வியந்து பார்த்திருக்கின்றனர் இயக்குநர் உட்பட. அந்த கணமே ஒரே ஏரியாவுக்கு நான்கு விநியோகஸ்தர்கள் அட்வான்ஸ் பணத்துடன் நிற்க மளமளவென அனைத்து ஏரியாக்களும் விற்றது.

இந்நிலையில் படம் வெளியானது. சூப்பர் ஹிட் பாடல்களாலும், சண்டைக் காட்சிகளாலும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜாவின் இசை இந்தப் படத்தினை தூணாகத் தாங்கிப் பிடித்து மொத்த கதையின் போக்கையே மாற்றி வெற்றி பெற வைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...