இணையத்தில் வைரலாகும் ஜோதிகாவின் எவரெஸ்ட் டிரக்கிங்.. எந்த ஹீரோயினும் செய்யாத சாதனை என பாராட்டு

’வாலி‘ படத்தில் சிறிய கெஸ்ட் ரோலில் அறிமுகமாகி பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் முதல் படத்திலேயே தனது கணவருடன் ஜோடி சேர்ந்து முழு ஹீரோயினாக நடித்து அதன்பின் தமிழ்சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்தான் ஜோதிகா. துறுதுறு நடிப்பு, சற்றே பூசிய உடல், காட்சிக்கு ஏற்ற அளவான கிளாமர் என தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்புவாக வலம் வந்தவர். ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என தமிழ் ஹீரோக்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கியவர்.

தற்போது திருமணத்திற்குப் பிறகு நடிப்புத் தொழிலை விடாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே போன்ற படங்களிலும் நடித்து அடுத்த ரவுண்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு திருமணம் முடிந்து, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு மத்தியில் ரோல் மாடலாக ஓடோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அதன் உச்சமாக தற்போது தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஹீரோயினும் செய்யாத சாதனை ஒன்றை தற்போது ஜோதிகா செய்திருக்கிறார். ஆம். உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் கால் பதித்துள்ளார். ஓர் ரியல் டிரக்கிங் மலையேற்ற சாகச வீரர் என்னவெல்லாம் செய்வாரோ அதே போல் கிடைக்கும் பொருட்களை வைத்து வாழ்வது, சிறிய டெண்ட் அமைத்துத் தங்குவது, நெருப்பு மூட்டிக் கொள்வது போன்றவற்றோடு மலையேற்றப் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

துரோகம், இழப்பால் சறுக்கலைச் சந்தித்த சசிக்குமார்.. அயோத்தி மூலம் மீண்ட கதை

தற்போது இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் அவரின் இந்தச் சாதனையைப் பாராட்டிப்பு புகழ்ந்து வருகிறார்கள்.

இப்படி திருமணம் முடிந்து வீட்டில் குழந்தைகள், குடும்பம் என்று மட்டும் இல்லாமல் தனக்கான கனவுகளை, இலட்சியத்தை அடையும் வரை துரத்திக் கொண்டே வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்குச் சென்று மற்ற பெண்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார் ஜோதிகா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...